தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஓசூர் சென்டிமென்ட் உடைக்கும் ஸ்டாலின்?

 ஓசூர் சென்டிமென்ட் உடைக்கும் ஸ்டாலின்?

 ஓசூர் சென்டிமென்ட் உடைக்கும் ஸ்டாலின்?


UPDATED : ஏப் 19, 2026 05:00 AM

ADDED : ஏப் 19, 2026 04:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 19, 2026 05:00 AM ADDED : ஏப் 19, 2026 04:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கி ருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி தொகுதி, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை 4:00 மணிக்கு, தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். அதற்காக, வேப்பனஹள்ளி தொகுதிக்கு உட்பட்ட கோபசந்திரம் தட்சிண திருப்பதி கோவில் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, மேடை அமைக்கும் பணிகள் நடந்தன.

இந்நிலையில், ஓசூர் அந்திவாடி விளையாட்டு மைதானம் அருகே உள்ள காலி இடத்திற்கு பொதுக்கூட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதில், காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, தி.மு.க.,வினர் கூறியதாவது:

ஓசூரில் இருந்து பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு, 25 கி.மீ., துாரத்திற்கு மேல் பயணிக்க வேண்டியிருப்பதால், ஓசூர் அந்திவாடி பகுதிக்கு பொதுக்கூட்டம் மாற்றப்பட்டுள்ளது.

ஓசூர் பகுதியில், முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்த ஆண்டுகளில், வேட்பாளர்கள் வெற்றி, தோல்வியை தாண்டி, தி.மு.க., ஆட்சி அமைக்கவில்லை என்ற, 'சென்டிமென்ட்' உள்ளது. அதனால் தான், முதலில் வேப்பனஹள்ளி தொகுதியில் பொதுக்கூட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால், ஓசூர் சென்டிமென்டை மாற்ற வேண்டும் என்பதற்காக, ஓசூருக்கே பொதுக்கூட்டம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us