தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/2027ம் ஆண்டு ஜனவரி முதல் பழைய செக் புத்தகம் செல்லாதா? ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு

2027ம் ஆண்டு ஜனவரி முதல் பழைய செக் புத்தகம் செல்லாதா? ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு

2027ம் ஆண்டு ஜனவரி முதல் பழைய செக் புத்தகம் செல்லாதா? ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு

1


ADDED : நவ 08, 2026 03:43 PM

Follow on GoogleFavourite on Google

1

ADDED : நவ 08, 2026 03:43 PM


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

2027ம் ஆண்டு ஜனவரி முதல் பழைய காசோலை புத்தகங்கள் செல்லாது என்பது வதந்தி என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தி இருக்கிறது.

புதிய காசோலை புத்தகங்கள் அமல்படுத்தப்படுகின்றன, இந்த புத்தகங்களில் நவீன பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன என்று கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி வருகின்றன. இதை கேள்விப்பட்ட ஏராளமாக மக்கள் குழம்பி போய், வங்கிகளுக்கு படையெடுக்க ஆரம்பித்தனர்.

சமூக வலைதளங்களிலும் காசோலை செல்லாது என்று பலரும் தொடர்ந்து பதிவிட்ட வண்ணம் இருந்துள்ளனர். வங்கி வாடிக்கையாளர்கள் தரப்பில் பெரும் குழப்பம் ஏற்பட, ரிசர்வ் வங்கி அதை தெளிவுப்படுத்தி உள்ளது.

ரிசர்வ் வங்கியின் எக்ஸ் தள அறிவிப்பு;

தற்போது புழக்கத்தில் இருக்கும் காசோலை புத்தகங்கள் 2026ம் ஆண்டு டிச.31ம் தேதிக்கு பினன்ர் மாற்றப்பட உள்ளதாகவும், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் நவீன காசோலை புத்தகம் 2027ம் ஆண்டு ஜன.1 முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. இது ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்தது.

தற்போதுள்ள சூழலில் காசோலை புத்தகங்களில் எந்த மாற்றத்தையும் ரிசர்வ் வங்கி கொண்டு வரவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம். சமூக வலை தளங்களில் வரும் செய்தி தவறு, மக்களை திசைதிருப்பக்கூடியது. இத்தகைய விவகாரங்களில் இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்பபோது அறிவிப்புகளை வெளியிடும். அதை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறி இருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us