உலகக்கோப்பையுடன் பிரதமரை சந்தித்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர்!
உலகக்கோப்பையுடன் பிரதமரை சந்தித்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர்!
ADDED : நவ 05, 2025 08:28 PM

புதுடில்லி: உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
நவ., 2ம் தேதி நவி மும்பையில் நடந்த மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை 52 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன்மூலம், மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதற்காக பல்வேறு தரப்பினரிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தன.
மேலும், கோப்பையை வென்று திரும்பிய வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியினர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, கோப்பையை பிரதமரிடம் கொடுத்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது, பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் மற்றும் பயிற்சியாளர் அமோல் ஆகியோர் உடனிருந்தனர்.

