உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடு எது? 7வது ஆண்டாக முதலிடம் வகிக்கும் யுஏஇ!
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடு எது? 7வது ஆண்டாக முதலிடம் வகிக்கும் யுஏஇ!
UPDATED : டிச 11, 2025 11:08 AM
ADDED : டிச 11, 2025 10:57 AM

புதுடில்லி: உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 7வது ஆண்டாக யுஏஇ முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 67வது இடத்தில் உள்ளது.
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் குறித்த பட்டியலை கனடாவை சேர்ந்த ஆர்ட்டன் கேப்பிடல் என்ற நிறுவனம் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம் என்பதன் அடிப்படையில் இது தீர்மானிக்கப்படுகிறது. பட்டியலில் தொடர்ந்து 7வது ஆண்டாக யுஏஇ முதலிடத்தில் உள்ளது.
இந்த பட்டியலில் இந்தியா 67வது இடத்தில் உள்ளது. யுஏஇ பாஸ்போர்ட் மூலம் 179 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். சிங்கப்பூர், ஸ்பெயின் ஆகியவை 2வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் சரிவைச் சந்தித்துள்ளன.
டாப் 10 நாடுகள் எவை?
அண்டை நாடான இலங்கை 84வது இடத்திலும், பாகிஸ்தான் 91வது இடத்திலும் உள்ளது. உலகின் டாப் 10 சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடுகள் விபரம் பின்வருமாறு:
1. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ)
2. சிங்கப்பூர், ஸ்பெயின்
3. பெல்ஜியம், பிரான்ஸ், சுவீடன், ஜெர்மனி, நெதர்லாந்து, பின்லாந்து, லக்சம்பர்க், இத்தாலி, டென்மார்க், போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, கிரீஸ், ஆஸ்திரியா, மலேசியா, நார்வே, அயர்லாந்து, தென் கொரியா, ஜப்பான்
4. போலந்து, ஸ்லோவேனியா, குரோஷியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, எஸ்டோனியா
5. மால்டா, ருமேனியா, செக் குடியரசு, பல்கேரியா, லாட்வியா, நியூசிலாந்து
6. லிதுவேனியா, லிச்சென்ஸ்டீன், ஆஸ்திரேலியா
7. சைப்ரஸ், ஐஸ்லாந்து
8. யுனைடெட் கிங்டம், கனடா
9. அமெரிக்கா
10. மொனாக்கோ

