தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/நேற்றைய போக்சோ குற்றங்கள்..

நேற்றைய போக்சோ குற்றங்கள்..

நேற்றைய போக்சோ குற்றங்கள்..


ADDED : ஜூலை 23, 2026 04:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 04:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* திருநெல்வேலி, முக்கூடல், அரசன்குளத்தை சேர்ந்த, 9 வயது சிறுமி, பாட்டி பராமரிப்பில் இருந்தார். அதே பகுதியை சேர்ந்த இசக்கியப்பன், 60, என்பவர், சிறுமியை மிரட்டி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சேரன்மகாதேவி போலீசார், போக்சோவில் இசக்கியப்பனை, நேற்று கைது செய்தனர்.

* நாமக்கல், குமாரபாளையத்தை சேர்ந்தவர் செந்தில் குமாரன், 27. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 17 வயது இளம்பெண்ணிடம் பழகி, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். ஈரோடு மகளிர் போலீசார், போக்சோவில் செந்தில்குமாரனை, நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

* ஈரோடு, சத்தியமங்கலம் உக்கரத்தை சேர்ந்த, 17 வயது வாலிபர், சமூக வலைதளம் மூலம், 17 வயதான பிளஸ் 2 மாணவியுடன் பழகி, திருமணம் செய்தார். இளம்பெண் தற்போது, இரண்டு மாத கர்ப்பமாக உள்ளார். சத்தியமங்கலம் போலீசார், வாலிபர் மீது போக்சோவில் வழக்கு பதிந்தனர்.

* கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் வெற்றிவேல், 26. இவர், நேற்று முன்தினம் மாலை, நடந்து சென்ற, 14 வயது சிறுமியை வழிமறித்து, கையை பிடித்து இழுத்து, பாலியல் தொந்தரவு கொடுத்தார். கள்ளக்குறிச்சி போலீசார், வெற்றிவேலை, போக்சோவில் நேற்று கைது செய்தனர்.

* திருநெல்வேலி, கீழப்பிள்ளையார்குளத்தை சேர்ந்த, 17 வயது இளம்பெண் புகைப்படத்தை, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக்குமார், 27, 'மார்பிங்' செய்து, சமூக வலைதளங்களில் பரப்பினார். நெல்லை போலீசார், போக்சோவில் வழக்கு பதிந்து, பெங்களூருவில் இருந்த கார்த்திக்குமாரை, நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us