ADDED : ஜூலை 22, 2026 11:12 PM

சென்னை: தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில், நேற்று ஓரிரு இடங்களில் இயல்பை விட, 4 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகரித்தது. மதுரையில் அதிகபட்சமாக 104.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளி மண்டலத்தில், ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. அதனால், தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும் நாளையும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 25, 26ம் தேதிகளில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
