உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 22, 2026 11:11 PM

அ நிறம் | அளவு
சென்னை: சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகம் முழுதும் ரவுடிகள், குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள், குற்ற செயல்களில் ஈடுபட திட்டமிட்டு இருப்போரை, போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.
அதன் தொடர் நடவடிக்கையாக, கடந்த 15ல் இருந்து, 21ம் தேதி வரை, ஒரு வாரத்தில், ரவுடிகள் 31,005 பேரிடம் விசாரணை நடத்தினர்.
அவர்களில், ஏற்கனவே குற்ற வழக்குகளில் சிக்கி கைதாகி, ஜாமினில் வெளி வந்த போதிலும், தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் உட்பட, 1,155 பேர் கைது செய்யப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தங்கள் மீதான குற்ற வழக்குகளில், விசாரணைக்கு ஆஜராகாததால், நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட, 2,906 பேர் கைது செய்யப்பட்டனர்.
