ADDED : ஆக 13, 2024 04:11 AM

மதுரை: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் சமுதாய மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக, இந்த சமூக மக்களில் 10 பேர் கொண்ட குழுவாக அமைத்து, ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க ரூ.3 லட்சம் நிதி அளிக்கப்படுகிறது.
தகுதியான வயது குறைந்தபட்சம் 20 இருக்க வேண்டும். குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலம் பயிற்சி பெற்றவர்களைக் கொண்ட குழுவுக்கு முன்னுரிமை. விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற பெண்கள் குழுவுக்கும் முன்னுரிமை உண்டு.
தையல் தெரிந்த, பத்து பேர் கொண்ட குழுவாக இருக்க வேண்டும். இவர்களின் ஆண்டு வருமானம் ரூ. ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விருப்பமுள்ளோர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து செப்.30க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

