UPDATED : மார் 15, 2025 03:55 AM
ADDED : மார் 15, 2025 12:51 AM

கோவை அவிநாசி சாலை - சத்தியமங்கலம் சாலை இடையே, 10,740 கோடி ரூபாயில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான, விரிவான திட்ட அறிக்கை, மத்திய அரசின் மூலதன பங்களிப்பு பெற அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் இதற்கான பணிகள் துவக்கப்படும்
உதகமண்டலத்தில் சுற்றுலா பயணியரை கவரும் வகையில், அப்பகுதியின் நுண்ணிய சுற்றுச்சூழல் தன்மையை கருத்தில் வைத்து, 'ரோப்வே' எனும் உயர் போக்குவரத்து அமைப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் ஆராயப்படும்.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார், நெல்லியாளம், கோவை மாவட்டம் வால்பாறை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், சேலம் மாவட்டம் ஏற்காடு ஆகிய பகுதிகளில், 1,200 சதுர கி.மீ., பரப்பளவில், மலைப்பகுதிகளுக்கான முழுமையான வளர்ச்சி திட்டங்கள் தயாரிக்கப்படும்
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள, 5,256 குடியிருப்புகள், 1,051 கோடி ரூபாய் செலவில், இரண்டு ஆண்டுகளில் மறுகட்டுமானம் செய்யப்படும்
குறைந்த வருவாய் பிரிவினருக்கு வீட்டுவசதியை ஏற்படுத்த, தொகுப்பு நிதியம் ஏற்படுத்தப்படும்
நீலகிரி மாவட்டம், குன்னுாரில், கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைக்கப்படும்
சேலத்தில் ஒரு லட்சம் புத்தகங்கள், போட்டித்தேர்வு மாணவர்கள் படிக்கும் வசதி, மாநாட்டு கூடத்துடன் புதிய நுாலகம் கட்டப்படும்
சேலம் பால் பண்ணையில், நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு 15 கோடி ரூபாய்; ஈரோடு மாவட்டத்தில், பால்பண்ணை இயந்திரங்கள் நவீனமயமாக்கலுக்கு 10 கோடி ரூபாய்; சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள பால் பண்ணைகளில், நவீன பால் அளவிடும் கருவிகள், நவீன பால் தகவல் சேகரிப்பான் மற்றும் நிலைகாட்டிக்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
திருப்பூர் மாவட்டத்தில், 1,252 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம், 890 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்
ஈரோடு மாவட்டத்தில், 214 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம், 374 கோடி ரூபாயில் அமைக்கப்படும்
கோவை மாநகராட்சியில், 120 கோடி; திருப்பூர் மாநகராட்சியில், 100 கோடி ரூபாய்க்கு, நகர்ப்புற பத்திரங்கள் வாயிலாக கூடுதல் நிதி ஆதாரங்கள் திரட்ட முயற்சிக்கப்படும்
கோவை மாநகராட்சியில், 200 கோடி ரூபாயில் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
கோவை மாவட்டம் ஆழியாறில், 1,000 மெகா வாட் திறனில் நீரேற்று மின் திட்டம், பொது - தனியார் பங்கேற்புடன் செயல்படுத்தப்படும்.