தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ தி.மு.க.,விற்கு நேசக்கரம் நீட்டும் ராகுல்!

தி.மு.க.,விற்கு நேசக்கரம் நீட்டும் ராகுல்!

தி.மு.க.,விற்கு நேசக்கரம் நீட்டும் ராகுல்!

3


ADDED : செப் 27, 2026 04:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 04:15 AM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: தேர்தல் கமிஷன் பெரும் பிரச்னையில் சிக்கியுள்ளது. தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கும், மற்ற இரண்டு தேர்தல் கமிஷனர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு என்கிற செய்தியால், டில்லி அரசியலே அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கிறது. எப்படி இதை சமாளிப்பது என தெரியாமல், பா.ஜ., திண்டாடிக் கொண்டிருக்கிறது.

'ஞானேஷ் குமாரை நீக்க வேண்டும்' என ராகுலும், 'ஞானேஷ் குமாரை கைது செய்ய வேண்டும்' என மம்தா பானர்ஜியும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்; மற்ற எதிர்க்கட்சிகளும் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளன.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய வைத்த கரப்பான் பூச்சி கட்சியும், இந்த விவகாரத்தில் களத்தில் இறங்கியுள்ளது. ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை, போராட்டம் துவங்க முடிவெடுத்துள்ளது அந்த கட்சி.

இதனால் ஆடிப்போன ராகுல், இந்த விவகாரத்தில் கரப்பான் பூச்சி கட்சி, எங்கே காங்கிரசை மிஞ்சி விடுமோ என, அச்சப்படுகிறார். தர்மேந்திர பிரதான் விவகாரத்தில் காங்கிரசும் களம் இறங்கினாலும், இதற்கான கிரெடிட் கரப்பான் பூச்சி கட்சிக்கு தான் கிடைத்தது.

எனவே, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து போராட தயாராகி வருகிறார் ராகுல். இந்த விவகாரத்தில், தி.மு.க.,வும் தங்களுடன் இருக்க வேண்டும் என, விரும்புகிறாராம் ராகுல். இது தொடர்பாக கனிமொழியுடன் பேசியுள்ளாராம்.

'கேரளாவில் காங்கிரசும், இடதுசாரிகளும் எதிரும் புதிருமாக இருந்தாலும், தேசிய அளவில் பா.ஜ.,வை ஒன்றாகவே இணைந்து எதிர்த்து வருகிறோம். அது போல தி.மு.க.,வும் எங்களுடன் இணைந்து செயல்படலாம்' என்கிறாராம் ராகுல்.

ப தவிக்காக தி.மு.க.,வை உதறிவிட்டு, த.வெ.க., பக்கம் சென்று விட்ட காங்கிரசுக்கு உதவ தி.மு.க., தயாராக இருக்குமா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us