UPDATED : ஆக 18, 2024 01:31 AM
ADDED : ஆக 18, 2024 01:15 AM

புதுடில்லி: நம் அண்டை நாடான வங்கதேசத்தில் சமீபத்தில் கலவரம் நடந்தது. அதில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியினர் கொல்லப்பட்டதுடன், சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு, பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கு, பா.ஜ., கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி பேசிய பிரதமர் மோடி, தன் உரையில், 'வங்க தேசத்தில் உள்ள சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டும்; இந்தியாவின் 140 கோடி மக்களும் இதைத்தான் விரும்புகின்றனர்' என்றார்.
இஸ்ரேல் தாக்குதலால், காசாவில் பலியானவர்களுக்கு இந்தியாவில் எதிர்க்கட்சிகளும், பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், வங்கதேசத்தில் நடைபெறும் தாக்குதல் குறித்து அதிகம் பேசவில்லை. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கண்டனம் என ஏதோ பேச்சிற்கு பேசினாலும், ராகுல் இதுகுறித்து வாய் திறக்கவில்லை.
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பா.ஜ., முடிவெடுத்து உள்ளதாம். அனைத்து மாநில தலைநகரங்களிலும், ஹிந்துக்கள் மீதான தாக்குதலுக்கு கண்டன கூட்டம் நடத்தப் போகிறதாம்.
பா.ஜ.,வின் முதுபெரும் தலைவர் அத்வானி ரத யாத்திரை நடத்தியது போல, இந்த பொதுக்கூட்டங்கள் மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தும் என, பா.ஜ., நம்புகிறதாம்.