UPDATED : மார் 15, 2025 08:23 AM
ADDED : மார் 15, 2025 01:03 AM

புதுக்கோட்டை மாநக ராட்சி, அறந்தாங்கி நகராட்சி மற்றும், 526 ஊரக குடியிருப்புகள் பயன் பெறும் வகையில், 1,820 கோடி ரூபாயில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்
மயிலாடுதுறை, சீர்காழி நகராட்சிகள்; தரங்கம்பாடி, மணல்மேடு மற்றும் குத்தாலம் பேரூராட்சிகள் மற்றும் 1,042 ஊரக குடியிருப்புகள் பயன் பெறும் வகையில், 2,200 கோடி ரூபாயில் கூட்டுக்குடிநீர் திட்டம் அமல்படுத்தப்படும்
திருச்சி மாநகராட்சியில், 100 கோடி ரூபாய் நகர்ப்புற பத்திரங்கள் வாயிலாக, கூடுதல் நிதி ஆதாரங்கள் திரட்ட முயற்சிக்கப்படும்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை; தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுாரில் புதிதாக கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் திறக்கப்படும்.
கடலுாரில் காலணி தொழில் பூங்கா
திருச்சியில், 5,000 பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில், 250 ஏக்கரில் பொறியியல் மற்றும் வார்ப்பக தொழில் பூங்கா
கடலுாரில் 500 ஏக்கரில், புதுக்கோட்டையில் 200 ஏக்கரில் புதிய தொழிற் பூங்கா.
ஒரு லட்சம் புத்தகங்களுடன், போட்டித் தேர்வு மாணவர்கள் படிக்கும் வசதியுடன் கடலுாரில் புதிய நுாலகம் கட்டப்படும்.