ADDED : செப் 08, 2024 03:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேல் படிப்பிற்காக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பிரிட்டன் சென்றுள்ள நிலையில் தமிழக பா.ஜ.,வை நிர்வகிக்க ஆறு பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது, பா.ஜ., தலைமை. இந்த குழுவிற்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எச்.ராஜா, டில்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சமீபத்தில் சந்தித்தார். பிரதமர் மோடி வெளிநாடு சென்றுவிட்டதால் அவரை சந்திக்க முடியவில்லை.
பின் சென்னை வந்த ராஜா, கவர்னர் ரவியைச் சந்தித்தார். இந்த இரண்டு சந்திப்பும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமித் ஷாவின் ஆலோசனையின்படி கவர்னரைச் சந்தித்துள்ளாராம் ராஜா.
என்ன பேசினர் என தெரிந்து கொள்ள, தமிழக பா.ஜ., தலைவர்களை விட தி.மு.க.,வினர் ஆவலாக இருக்கின்றனராம். 'விரைவில் தடாலடியாக ஏதாவது நடக்குமா?' எனவும் கேள்விகள் எழுந்துள்ளன.