தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ 'மாநிலத்தின் வளர்ச்சியை புறக்கணிக்கும் தி.மு.க., அரசு'

'மாநிலத்தின் வளர்ச்சியை புறக்கணிக்கும் தி.மு.க., அரசு'

'மாநிலத்தின் வளர்ச்சியை புறக்கணிக்கும் தி.மு.க., அரசு'


ADDED : ஜூலை 28, 2024 04:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2024 04:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'தமிழகத்திற்கு பல நலன்கள் கிடைக்கும் நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதன் வாயிலாக, மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நலன்களை விட, அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு மட்டுமே தி.மு.க., அரசு முன்னுரிமை அளிக்கிறது' என, தமிழக பா.ஜ., தெரிவித்துள்ளது.

கம்பி கட்டும் கதை


அக்கட்சி அறிக்கை:

உங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு, தமிழகத்தின் நலன்களை விட்டு கொடுக்கலாமா முதல்வர் ஸ்டாலின்? 'மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில், தமிழகத்திற்கு எந்த நலத்திட்டங்களும் இல்லை; தமிழகம் என்ற பெயரே பட்ஜெட்டில் இல்லை' என்ற தன் கம்பி கட்டும் கதையை உண்மையாக்கும் நோக்கில், பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக, ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நாட்டின் சுமூக நிர்வாகத்திற்கு மத்திய, மாநில அரசுகள் இடையே ஒத்துழைப்பும், கூட்டுறவும் மிக அவசியம்.

இரு தரப்பின் கூட்டுறவையும், மாநிலங்களின் சமூக பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் நிடி ஆயோக் கூட்டத்தை, ஸ்டாலின் புறக்கணிப்பதாக கூறுவது ஏற்புடையதல்ல.

தங்களுக்கு ஓட்டுப்போட்ட தமிழக மக்களின் பிரதிநிதியாக கூட்டத்தில் பங்கேற்று, அவர்களின் தேவைகளை எடுத்துரைக்க மறுப்பதன் வாயிலாக, தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஸ்டாலின் முட்டுக்கட்டை போடுகிறார்.

நிடி ஆயோக் வாயிலாக, தமிழகம் பல நன்மைகளை பெற்றுள்ளது.

தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் தளமாக செயல்படும், 'அடல்' சமூக கண்டுபிடிப்பு மையம், தமிழகத்தில் துவக்கப்பட்டது.

காழ்ப்புணர்ச்சி


கடந்த, 2021ல் நகர்ப்புற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கான மாநாட்டை, நிடி ஆயோக் நடத்தியது.

இவ்வாறு, தமிழகத்திற்கு பல நலன்கள் கிடைக்கும் நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதன் வாயிலாக, மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நலன்களை விட, அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்கு மட்டுமே தி.மு.க., அரசு முன்னுரிமை அளிக்கிறது என்பது தெளிவாகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us