ADDED : ஆக 28, 2024 04:37 AM

சென்னையில் நடந்த, அமைச்சர் வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' நுால் வெளியீட்டு விழாவில், நடிகர் ரஜினி பேசுகையில், 'தி.மு.க.,வில் நிறைய பழைய மாணவர்கள் உள்ளனர்.
'ரேங்க் வாங்கிய பின்னும் வகுப்பறை விட்டு செல்ல மறுக்கின்றனர்' என அமைச்சர் துரைமுருகன் பெயரை குறிப்பிட்டு பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ரஜினி மீது அதிருப்தி அடைந்த துரைமுருகன், 'வயதாகி சாகப்போகிற நிலையிலும் நடிப்பதால் தான், இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது' என்று, ரஜினியை விமர்சித்தார்.இந்த விமர்சனத்தைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் வற்புறுத்தலால், துரைமுருகன் ரஜினிக்கு போன் செய்து பேசி சமரசமாகினர்.
இந்நிலையில், முதல்வர் அமெரிக்கா செல்வதையொட்டி, நேற்று மதியம், சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணாதுரை, கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று, மலர் துாவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், துரைமுருகன் பங்கேற்கவில்லை.
- நமது நிருபர் -