24ல் பவுர்ணமி, சுபமுகூர்த்தம்; மனுதாக்கலுக்கு அனுமதி?
24ல் பவுர்ணமி, சுபமுகூர்த்தம்; மனுதாக்கலுக்கு அனுமதி?
ADDED : மார் 22, 2024 06:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்., 19ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான மனுதாக்கல், 20ம்தேதி துவங்கியது.
23ம் தேதி சனிக்கிழமையும், 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் வருகிறது. இந்த இரண்டு விடுமுறை நாட்களிலும் மனுத்தாக்கல் நடக்காது என, தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்துள்ளது.
ஞாயிற்றுகிழமை, பவுணர்மியுடன் சுபமுகூர்த்த நாளும் வருகிறது. இந்த நாளில் மனுதாக்கல் செய்வதற்கு, பல்வேறு அரசியல்கட்சியினர் மட்டுமின்றி, சுயேச்சைகளும் விரும்புகின்றனர்.
எனவே, விடுமுறைநாளான 24ம்தேதி மனுதாக்கல் செய்தவதற்கு, தேர்தல் கமிஷன் அனுமதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

