UPDATED : மே 12, 2024 11:46 AM
ADDED : மே 12, 2024 06:23 AM

குஜராத்தில் பா.ஜ., ஆட்சியில் பூபேந்திர படேல் முதல்வராக உள்ளார். இவர் மீது, எந்த குற்றச்சாட்டும் இல்லை; இருப்பினும் தன் பதவியை ராஜினாமா செய்ய முன் வந்துள்ளார் படேல். 'குஜராத் பா.ஜ.,வின் மிகவும் முக்கியமான தலைவர், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமாயிற்றே... என்னாச்சு?' என பல கேள்விகள்.
முதல்வர் படேலின் மகனுக்கு உடல்நிலை சரியில்லை. நரம்பு தொடர்பான வியாதி; இது தொடர்பாக அவருக்கு ஆப்பரேஷன் நடந்துள்ளது. அவரை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவருடைய நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவரை பார்த்துக் கொள்வதற்காகவே, தன் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளதாக பா.ஜ., தரப்பில் சொல்லப்படுகிறது.
'காங்., முதல்வர்களை போல, நாற்காலியைக் கட்டிக் கொண்டு தொடரும் வழக்கம் பா.ஜ.,வில் இல்லை' என்கின்றனர் பா.ஜ., தலைவர்கள். ஜூன் 4ம் தேதிக்கு பின், குஜராத் முதல்வரின் ராஜினாமா ஏற்கப்படலாம்.