ரயில்வே தனியார் மயமாகிறதா?: அஷ்வினி வைஷ்ணவ் பேட்டி
ரயில்வே தனியார் மயமாகிறதா?: அஷ்வினி வைஷ்ணவ் பேட்டி
ADDED : மார் 31, 2024 01:28 AM

ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பதுறையின் மத்திய அமைச்சர் அஷ்வினிவைஷ்ணவ், பிரதமர் மோடியின்அமைச்சரவையில் சத்தமில்லாமல்சாதிப்பவர் என்ற பெயர் எடுத்தவர். கடந்த 10 ஆண்டுகளாக, நம் நாட்டில், ரயில்வே துறை கண்டு வரும் புதுமைக்கும், அதிவேக வளர்ச்சிக்கும் முக்கிய காரணமான இவர், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்தசிறப்பு பேட்டி:
ரயில்வே பட்ஜெட் தனியாக சமர்ப்பிக்கப்பட்ட போது, நிதிஅமைச்சருக்கு இணையாக ரயில்வே துறை அமைச்சருக்கும் முக்கியத்துவம் இருந்தது. கடந்த 2017 - -18 முதல் பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்டதும், இந்த நிலை முற்றிலும் மாறிப்போனது. இதனால், ரயில்வே துறைக்கு பலன் இருக்கிறதா? இருக்கிறதுஎன்றால் எப்படி?
கடந்த 1950களில், போக்குவரத்து துறையில் 80 சதவீத பங்கு வகித்தது ரயில்வே துறை. ஆனால், அத்துறையில் பல ஆண்டுகளாக எந்த விதமான முதலீடும் செய்யப்படவில்லை. இந்த துறையின் முன்னேற்றத்திற்கு ஏராளமான முதலீடுகள் தேவை. முதலீடு இருந்தால் தான் முன்னேற முடியும்.
எனவே தான், ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைக்கும் துணிச்சலான முடிவை பிரதமர் மோடி எடுத்தார். அதன்பலனை, இப்போது கண்ணெதிரே பார்க்கிறோம். இணைப்புக்கு முன், ரயில்வே துறைக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு, ஆண்டுக்கு 14,000 கோடி ரூபாய் தான். இப்போது ஆண்டுக்கு, 2.52 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.
இதனால், கணிசமான மாற்றம் வந்துள்ளது. புதிய ரயில் பாதைகள் போடப்பட்டுள்ளன, ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன, மிகத் தரமான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றால், ஒவ்வொரு இந்தியரது வாழ்க்கையும் மேம்பட்டு இருக்கிறது.
புகழைவிட பணி தான்முக்கியம் என்றுசொல்கிறீர்களா?
நிச்சயமாக. பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால், ரயில்வே அமைச்சகம்அரசியலில் இருந்து விலகிவிட்டது. அவர் ரயில்வேயை, முற்றிலும் ஒரு தொழில்நுட்ப ரீதியான அமைச்சகமாக இயங்குமாறு மாற்றி விட்டார். பொருளாதார மேம்பாடு மற்றும் மக்கள் நலன் மட்டும் தான், இப்போது இந்த துறையின் நோக்கம் என மாற்றிவிட்டார்.
ரயில்வே துறை தனியார் மயமாகப் போகிறது என, அவ்வப்போது பேச்சு கிளம்புகிறது. இதுஉண்மையா?
ரயில்வே, இந்திய பொருளாதாரத்தின் மிக முக்கியமான அங்கம். அடித்தட்டு மக்களுக்கு இத்துறையின் சேவை தேவைப்படுகிறது. எங்கள் வாடிக்கையாளர்களை பாருங்கள், ஏழைகள் மற்றும் மத்திய தர வர்க்கத்தினர் தான் அதிகம்.
இவர்களுக்கு எப்படி சகாய விலையில் பயண வசதி செய்து தர முடியும் என்பதில் தான், எங்கள் கவனம் இருக்கிறது. அதனால், தனியார்மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் முழு பேட்டி தேர்தல் களம் இணைப்பில்

