sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மிக அவசியம்

/

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மிக அவசியம்

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மிக அவசியம்

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மிக அவசியம்


UPDATED : மே 26, 2024 05:01 AM

ADDED : மே 26, 2024 12:45 AM

Google News

UPDATED : மே 26, 2024 05:01 AM ADDED : மே 26, 2024 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ஏடிஸ்' வகை கொசு கடிப்பதால், டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. மனிதரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவா விட்டாலும் கூட, கொசு கடிப்பதன் மூலம் இந்த காய்ச்சல் எளிதில் பரவி விடுகிறது. பருவநிலை மாற்றம் ஒருபுறம் இருந்தாலும், நகர மயமாக்கல், திட்டமிடப்படாத திடக்கழிவு மேலாண்மை நகரில் கொசுக்களின் பெருக்கத்துக்கு பெரிதும் காரணமாகி விடுகிறது.

கடந்தாண்டு நாட்டில், 94 ஆயிரத்து, 198 பேரும், மாநிலத்தில், 8,953 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய அளவில், 91 பேரும், மாநிலத்தில், 11 பேரும் டெங்குவுக்கு உயிரிழந்துள்ளனர். நடப்பாண்டு தமிழகத்தில் தற்போது (மே 3வது வாரம்) வரை பாதிப்பு, 3 ஆயிரத்தை கடந்துள்ளது.

வழக்கமான நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மருத்துவம் மற்றும் பொதுசுகாதாரத்துறை துவக்கியுள்ளது. காய்ச்சல் அறிகுறிகளுடன் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு வருபவர் விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.

ஒருவருக்கு டெங்கு உறுதியானது தெரிய வந்தால், உடனடியாக சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினர், குறிப்பிட்ட நபர் வசித்த இடத்தில் கொசு ஓழிப்பு நடவடிக்கை, குடிநீரில் குளோரின் கலப்பது, மருத்துவ முகாம் அமைத்து கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் துவங்குகிறது. இருப்பினும், டெங்கு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் இன்னமும் வளர வேண்டும். நோய் குறித்து மக்கள் விரிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

கொசு உற்பத்தியை

தடுக்க வேண்டும்!

மருத்துவத்துறையினர் கூறியதாவது:


பொதுவாக பருவமழை காலத்தின் போது ஆக., - செப்., மாதங்களின் அதன்பின் தான் டெங்கு பாதிப்பு அதிகரிக்கும். ஆனால், நடப்பாண்டு பருவமழை துவங்கும் முன்னரே, அதுவும் மே மாதத்திலேயே காய்ச்சல் பாதிப்பு பதிவாகியுள்ளது.

திருப்பூரிலும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. தேங்கி நிற்கும் மழைநீரில் ஏடிஸி வகை கொசு உற்பத்தியே டெங்கு பரவ முக்கிய காரணமாக உள்ளது. எனவே, கொசு பரவல் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். வீடுகளில் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருக்கும் பாத்திரம், துாக்கி வீசப்படும் குடிநீர் பாக்கெட்டுகளில் தேங்கியிருக்கும் தண்ணீரில் ஏடிஸ் எளிதில் உற்பத்தியாவதால், வீடுகளிலும், சுற்றுப்பகுதியிலும் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

வீட்டையும் சுற்றுப்புறத்தையும் துாய்மையாக வைத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உடலை நன்கு மூடும் வகையிலான ஆடைகளை குழந்தைகளுக்கு அணிந்து விட வேண்டும். துாங்கும் போது கொசுவலை, கொசுவிரட்டிகளை பயன்படுத்தலாம்.

இவ்வாறு அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

தடுப்பூசி இல்லை... அலட்சியம் கூடாது!

டெங்குக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் கூறியதாவது:தொடர் காய்ச்சல், கடும் தலைவலி, கண்களுக்குப் பின்புறத்தில் வலி, மூட்டுவலி, வாந்தி, தோல் தடிப்புகள் போன்றவை டெங்குவின் அறிகுறிகள். டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குணமாகிவிடுகின்றனர்.பலரும் உடனடியாக டாக்டரை அணுகி, மருத்துவ சிகிச்சை வழிமுறைகளை துவங்காமல் சுய மருத்துவம் பார்ப்பது தான், உடல் நலத்தில் சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது. பாதிப்பின் தீவிரத்தை ஆரம்பத்திலே முழுமையாக அறியாமல் இது போன்ற தவறுகளை செய்யும் போது, மரணம் ஏற்பட்டு விடுகிறது.பெரும்பாலும் குழந்தைகளுக்கு அறிகுறிகள் முழுமையாக தெரிவதில்லை. சாதாரண காய்ச்சல் என அலட்சியமாக இருந்து, பின் தடுமாறுகின்றனர். காய்ச்சல் குறித்து தவறாக புரிந்து கொண்டு சரியான நேரத்துக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால், சிக்கல் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் எந்த இடத்திலும் கூடாது. இதுவரை டெங்குக்கென தடுப்பூசி கண்டறிப்படவில்லை. எனவே, குழந்தைகளாக இருந்தாலும், பெரியவர்களால் இருந்தாலும் இயன்றவரை டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பது சாலச்சிறந்தது,' என்றனர்.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us