திரிணமுல் காங்கிரசின் அடையாளமாக மாறிய ஊழல், குற்றம்: பிரதமர் மோடி
திரிணமுல் காங்கிரசின் அடையாளமாக மாறிய ஊழல், குற்றம்: பிரதமர் மோடி
ADDED : ஆக 22, 2025 09:02 PM

கோல்கட்டா: '' ஊழல் மற்றும் குற்ற சம்பவங்கள் ஆகியன மேற்கு வங்கத்தை ஆளும் திரிணமுல் காங்கிரசின் அடையாளமாக மாறி விட்டது,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் சென்ற பிரதமர் மோடி,மெட்ரோ ரயில் திட்டத்தை துவக்கி வைத்ததுடன், வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பல்வேறு ரயில் திட்டப்பணிகளையும் துவக்கி வைத்தார்.
இதன் பிறகு கோல்கட்டாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மேற்கு வங்கம் வளர்ச்சி பெறும் வரை, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற யாத்திரை வெற்ற பெறாது என பாஜ நம்புகிறது. கடந்த 11 ஆண்டுகளில் இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்தையும் மத்திய அரசு செய்துள்ளது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு கொடுத்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு திரிணமுல் குண்டர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
துர்கா பூஜை நடைபெற உள்ள நிலையில் இந் இங்கு வந்துள்ளேன். இந்த பூஜைக்காக, கோல்கட்டா விழாக்கோலம் பூண்டு தயாராகி வருகிறது. மகிழச்சிக்கான பண்டிகையுடன் வளர்ச்சிக்கான பண்டிகையை சேர்க்கும் போது மகிழ்ச்சி இரு மடங்கு ஆகும்.
மத்திய அரசின் திட்டங்களின் பலன்கள், மக்களுக்கு சென்றடைய மேற்கு வங்கத்தில் பாஜ அரசை தேர்வு செய்ய வேண்டியது முக்கியம். திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு, பாஜ நிச்சயம் தேர்வு செய்யப்படும்.
மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. குற்றங்கள் மற்றும் ஊழல் ஆகியன திரிணமுல் காங்கிரசின் அடையாளமாக மாறி உள்ளது. திரிணமுல் ஆட்சியில் இருக்கும் வரை மாநிலம் வளர்ச்சி அடையாது. ஆட்சியில் இருந்து திரிணமுல் காங்கிரஸ் அகற்றப்படும் போது தான் உண்மையான மாற்றம் ஏற்படும். கிரிமினல்களும் ஊழல்வாதிகளும் சிறையில் அடைக்கப்பட வேண்டும். அதிகாரத்தில் அமர வைக்கக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.