sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

மதுபான ஊழலில் கிடைத்த ரூ.1000 கோடி தேர்தலுக்காக பதுக்கல்: அண்ணாமலை பகீர்

/

மதுபான ஊழலில் கிடைத்த ரூ.1000 கோடி தேர்தலுக்காக பதுக்கல்: அண்ணாமலை பகீர்

மதுபான ஊழலில் கிடைத்த ரூ.1000 கோடி தேர்தலுக்காக பதுக்கல்: அண்ணாமலை பகீர்

மதுபான ஊழலில் கிடைத்த ரூ.1000 கோடி தேர்தலுக்காக பதுக்கல்: அண்ணாமலை பகீர்

13


UPDATED : மார் 13, 2025 04:30 AM

ADDED : மார் 12, 2025 08:39 PM

Google News

UPDATED : மார் 13, 2025 04:30 AM ADDED : மார் 12, 2025 08:39 PM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:''மதுபான ஊழலில் தி.மு.க.வுக்கு மட்டும் சுமார் 1000 கோடி ரூபாய் கருப்பு பணமாக கிடைத்துள்ளது, தேர்தலுக்காக அதை பதுக்கி வைத்துள்ளனர்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் அளித்த பேட்டி:


டில்லி, சட்டீஸ்கர் மதுபான ஊழலை தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் மதுபான ஊழல் நடந்துள்ளது. அது அமலாக்கத்துறை சோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடவில்லை. சுமார் 30000 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மதுபான ஊழல் மூலம் தி.மு.க.,வுக்கு மட்டும் சுமார் 1000 கோடி ரூபாய், கருப்பு பணமாக மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தவறான மதுபான கொள்முதல் கொள்கையால் தி.மு.க.வுக்கு கிடைத்த பணத்தின் மூலம், 2024 பார்லிமெண்ட் தேர்தலை சந்தித்துள்ளனர். அடுத்து, 2026 சட்டசபை தேர்தலையும் சந்திக்க, நிறைய பணம் பதுக்கி உள்ளனர்.

டாஸ்மாக் நிறுவனமும், மதுபான ஆலை நிர்வாகங்களும் இணைந்து, தமிழக மதுபான கொள்கையை முடிவு செய்கின்றன. அமலாக்கத் துறை அறிக்கை வந்த பின், 2026 தேர்தல் வரை மக்கள் இதை பற்றி பேச வேண்டும்.

ஒரு தலைபட்சமாக மத்திய அரசு அமலாக்கத்துறை வாயிலாக சோதனை நடத்துகிறது என சொல்கின்றனர். பா.ஜ. நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது கிடையாது. கடந்த காலங்களில் காங். ஆட்சியில் இடம்பெற்றிருந்த தி.மு.க.வை, ரெய்டு நடத்தி, கூட்டணி சேர்ந்தது காங்., 356 பிரிவை பயன்படுத்தி ஆட்சியை கலைத்தது காங்., அவர்களோடுதான் தற்போது கூட்டணியில் உள்ளனர்.

கனிமொழி எம்.பி., யின் மகன் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர். இங்குள்ள ஏழை குழந்தைகள் மூன்று மொழிகள் படிக்கக்கூடாது என, கனிமொழி ஒரு போதும் கூறக்கூடாது. அதற்கான அருகதை அவருக்கு கிடையாது.

களிமண் கரத்தை வைத்துக் கொண்டு முதல்வர் இரும்புக் கரம் என பொய் சொல்கிறார்.

திராவிட சித்தாத்தம் பேசுவதற்கே, நாம் முதல்வன் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். பிறகு மாணவர்களின் திறன் வளரும்?.

நீட் தேர்வு விவகாரம் எப்படி தோல்வியில் முடிந்ததோ, அதேபோலதான், தமிழக அரசின் மும்மொழி எதிர்ப்பு கொள்கையும் தோல்வியில் முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

'அண்ணே ஸ்ட்ராங்கா பேசுங்க!'


அ.தி.மு.க., தென் சென்னை மாவட்ட நிர்வாகி ஒருவரது இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன் தினம் நடந்தது. அந்நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து காரில் கிளம்பிய சீமானை பார்ததும், அவருடைய காரை நோக்கி ஓடி வந்தார். காரில் இருந்த சீமானிடம், ''அண்ணே... தைரியமா இருங்க. எல்லாமே நல்லபடியா நடக்கும். எல்லாத்தையும் ஸ்ட்ராங்கா பேசுங்க...'' என கூறி கைகுலுக்கிச் சென்றார் அண்ணாமலை.








      Dinamalar
      Follow us