தியாகத் திருவுருவாய் வாழ்ந்து மறைந்த தேசத் திருமகன்கள்
தியாகத் திருவுருவாய் வாழ்ந்து மறைந்த தேசத் திருமகன்கள்
UPDATED : ஆக 15, 2024 05:57 AM
ADDED : ஆக 14, 2024 11:25 PM

''நம்பற்குரிய அவ் வீரர், தங்கள் நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பர்'' என்பது பாரதியின் பாடல் வரி. அதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் தான் திருப்பூர் குமரன். 'சுதந்திர போராட்டத்தில் திருப்பூர் தியாகிகள்' குறித்து, நினைவு கூர்கிறார் ஆடிட்டர் ராமநாதன்:
கடந்த, 1909-10ல், 'தாயின் மணிக்கொடி பாரீர்' என, பாரதி பாடினான். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள், 22 ஆண்டுகளுக்கு பின், 1932ல் திருப்பூரில் உயிர் பெற்றது. தன் இன்னுயிர் ஈத்து, அந்த வரிகளை உயிர் பெறச் செய்தவர் திருப்பூர் குமரன். இவர் பிறந்தது, 1904, அக்., 4; இன்னுயிர் துறந்தது, 1932, ஜன., 11; அவர் இந்த உலகில் வாழ்ந்தது வெறும், 28 ஆண்டுகள் தான்.
போராட்ட திட்டம்நொய்யல் ஆற்றுப்பாலத்தின் மேற்கு பகுதியில், அகன்ற மணல் பரப்பிய இடத்தில் தான், சுதந்திர போராட்டம் குறித்த திட்டங்களை தீட்டுவர். கடந்த, 1932, ஜன., 6ம் தேதி, பி.எஸ்.சுந்தரம் அய்யர் தலைமையில், அறப்போராட்டத்திற்கான திட்டம் தீட்டப்பட்டது.
![]() |
கே.ஆர்.ஈஸ்வரமூர்த்தி கவுண்டர் தான், திருப்பூர் ஈஸ்வரன் கோவிலை கட்டியதால், அந்த தம்பதியினரின் சிலையை கோவில் வளாகத்தில் காணலாம் என்பது கூடுதல் தகவல்.பங்கெடுத்த தியாகிகள்இந்த ஊர்வலத்தில் பி.எஸ்.சுந்தரம் அய்யர், ராமன் நாயர், நாச்சிமுத்து கவுண்டர், நாச்சிமுத்து செட்டியார், சுப்பராயன் செட்டியார், பொங்காளி முதலியார், சென்னிமலை குமாரசாமி (திருப்பூர் குமரன்), அப்புக்குட்டி, நாராயணன் உள்ளிட்ட இரு மாணவர்கள் பங்கேற்றனர்.
இவர்களுக்கு, ராமசாமி கவுண்டர் அவரது மனைவி கோவிந்தம்மாள், மகள் முத்துலட்சுமி ஆகியோர் ஆரத்தி எடுத்தனர். துவக்கப்பள்ளி ஆசிரியர் ராமனுஜம் என்பவர், குமரனிடம் கொடி கொடுத்தார்.கே.ஆர்.ஈஸ்வரமூர்த்தி கவுண்டர், வெளியூர் சென்றுவிட்டதால், ஊர்வலத்தில் அவர் பங்கேற்கவில்லை. ஆஷர் தம்பதியை, போலீசார் முன்கூட்டியே கைது செய்தனர்.
ஊர்வலத்தில், 130 காவலர்கள், 2 காவல் அதிகாரிகள் இருந்தனர். ஊர்வலம் வடக்கு காவல் நிலையம் (தற்போதைய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி) முன்புறம் ஊர்வலம் வந்த போது, இன்ஸ்பெக்டர் முகம்மது தலைமையிலான போலீசார், அவர்களை கண்மூடித்தனமாக தாக்கினர்.
தேசிய கொடியை பிடித்தபடியே குமரன் மயங்கி விழுந்தார். பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 1932 ஜன., 11ல் இறந்தார்.அவரது இறுதி சடங்கில், முதலில் அவரது தம்பி ஆறுமுகம், பின், ராஜகோபால அய்யர், மாணிக்கம் செட்டியார், வெங்கடாசலம் பிள்ளை என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இந்த ஊர்வலத்தில் பங்கேற்ற பி.எஸ்.சுந்தரத்துக்கு போலீஸ் அடித்ததில், 19 இடத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு, காது கேளாமல் போய், கடைசி வரை நடைபிணமாகவே வாழ்ந்து, இறந்தார். காந்தியின் வேண்டுகோளை ஏற்று, சுதந்திர போராட்டத்திற்காக தன் பெற்றோரால் அர்ப்பணிக்கப்பட்டவர் தான் சுந்தரம் அய்யர். குமரனுக்கு கிடைத்த புக ழும், மரியாதையும் இவருக்கு கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டம்.