UPDATED : மே 12, 2024 11:47 AM
ADDED : மே 12, 2024 05:05 AM

ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தின், 39 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்து விட்டது. ஆனாலும், 'ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் 4ம் தேதி வரை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்' என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இதனால் தி.மு.க.,விற்கு பெரும் பிரச்னை. தி.மு.க., ஆட்சி அமைத்து மூன்று ஆண்டுகள் நிறைவு செய்வதையொட்டி, மிகவும் பெரிதாக கொண்டாட விரும்பினார் முதல்வர் ஸ்டாலின். தி.மு.க.,வினர் தினசரிகளில் முதல் பக்க விளம்பரம், 'டிவி'க்களில் வீடியோ விளம்பரம் என, ஏகத்திற்கும் திட்டமிட்டனர்; இதற்காக தேர்தல் கமிஷனையும் தி.மு.க., அணுகியது.
'நடத்தை விதிகள் இருக்கும் வரை, எந்த ஒரு அரசும் இப்படி மக்கள் வரி பணத்தில் விளம்பரம் செய்யக் கூடாது' என, மறுத்து விட்டதாம் தேர்தல் கமிஷன். கமிஷனின் உத்தரவால் தி.மு.க., நொந்து விட்டதாம்.