sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

மொழி பிரச்னையில் மாணவர்கள் எதிர்காலம்

/

மொழி பிரச்னையில் மாணவர்கள் எதிர்காலம்

மொழி பிரச்னையில் மாணவர்கள் எதிர்காலம்

மொழி பிரச்னையில் மாணவர்கள் எதிர்காலம்

15


ADDED : மார் 01, 2025 01:17 AM

Google News

ADDED : மார் 01, 2025 01:17 AM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'மொழியை படிப்பதற்கான தேர்வு, நம் இளைஞர்களுக்கு இருக்க வேண்டும்' என, கவர்னர் ரவி தெரிவிக்க, அதற்கு, 'தமிழகம் வந்து, மொழி பற்றி எங்களுக்கு பாடம் எடுக்கத் தேவையில்லை' என, தமிழக அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.

கவர்னர் ரவி அறிக்கை: தென் மாவட்டங்களை சேர்ந்த கல்வி, வணிகம், சுகாதாரம், விருந்தோம்பல், இளைஞர் 'ஸ்டார்ட் அப்'கள், பெண் தொழில் முனைவோர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உட்பட, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெருவாரியான உள்ளூர் தலைவர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் மாணவர்களுடன் கலந்துரையாடினேன்.

ஏராளமான சிரமங்கள் மற்றும் முறைசார் தடங்கல்கள் இருந்தபோதிலும், வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் இவர்களின் நேர்மறையான ஆற்றலையும், தொழில் முனைவுத்திறனையும் காண்பது, ஊக்கம் அளிப்பதாக இருந்தது.

இந்தப் பகுதி, மனித ஆற்றல் மற்றும் இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது. ஆனாலும், இது புறக்கணிக்கப்பட்டு பின்தங்கியுள்ளது போன்ற உணர்வைத் தருகிறது. தொழில் மயமாக்கலுக்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், இங்குள்ள மக்கள் வாய்ப்புகள் புறக்கணிக்கப்பட்டவர்களாக உணர்கின்றனர்.

இளைஞர்கள் இடையே காணப்படும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் சிக்கல்கள் தீவிரமானவை. ஊடக தலைப்பு செய்திகளில் இடம்பெறும் திட்டமிட்ட போராட்டங்களுக்கு மாறாக, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது. மாநில அரசின் கடுமையான இருமொழிக் கொள்கை காரணமாக, அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது, இந்த பிராந்திய இளைஞர்கள், வாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கின்றனர்.

ஹிந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில், துரதிருஷ்டவசமாக எந்தவொரு தென் மாநில மொழியையும் கூட படிக்க அனுமதிக்கப்படாதவர்களாக, அவர்கள் உணர்கின்றனர். இது உண்மையிலேயே நியாயமற்றது.

மொழியை படிப்பதற்கான தேர்வு, நம் இளைஞர்களுக்கு இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மொழி கொள்கையால் வாய்ப்பிழப்பு!



வெறுப்பேறிய கண்களுக்கு தெரியாது

அமைச்சர் ரகுபதி பதில்: தமிழகம் பொருளாதாரத்திலும், கல்வியிலும், பெற்றிருக்கும் வளர்ச்சியை பொறுக்க முடியாமல், தமிழகத்தின் மீது வெறுப்பை உமிழ்வதையே, தன் கடமையென கவர்னர் ரவி செயலாற்றி வருகிறார். தன் அரசியலமைப்பு கடமைகளை மறந்து, ஆதாரமற்ற அவதுாறுகளை வைத்து தமிழகத்தை இழிவுப்படுத்தும் அரசியலை செய்வதற்காகவே, மத்திய பா.ஜ., அரசு, ரவியை கவர்னராக வைத்திருக்கிறது.தன் சமூக வலைதள கணக்கை, இதற்காகவே பிரதானமாக பயன்படுத்தி வரும் கவர்னர், தமிழகம் எதில் பின்தங்கியுள்ளது என சொல்ல முடியுமா? கல்வி, மருத்துவம், பொருளாதாரம் ஆகியவற்றில் தமிழகத்தின் வளர்ச்சி, இந்திய மாநிலங்கள் எதனோடும் ஒப்பிட முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதை, மத்திய அரசின் புள்ளிவிபரங்களே சொல்லும்.அதை எல்லாம் கவர்னர் ரவி படித்தால்தானே... படித்தாலும், தமிழகத்தின் மீது வெறுப்பேறிய கண்களுக்கு அவை எப்படித் தெரியும்?தமிழகம் அடைந்திருக்கும் வளர்ச்சி, இருமொழிக் கொள்கையால் சாதித்தது. தமிழகத்தில் எப்படியாவது ஹிந்தியை திணிக்கலாம். அதற்கு புதிய கல்விக் கொள்கையை, ஒரு வழியாக வைத்து உள்நுழையலாம் எனும், ஆதிக்கவாதிகளின் சதியை அறியாதவர்களா தமிழர்கள்? தமிழ், தமிழகம், தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றின் மீது தொடர்ந்து வெறுப்பை உமிழும் கவர்னர் ரவி, தமிழர்களுக்கு மொழி உணர்ச்சி குறித்து பாடம் எடுக்க வேண்டாம். சனாதனத்தையும், சமஸ்கிருதத்தையும் தமிழகத்தில் காலுான்ற செய்ய, குட்டிக்கரணம் போடும் கவர்னரின் நடவடிக்கைகள், தமிழ் மண்ணில் வேறுான்றவில்லை.அப்படித்தான் மும்மொழிக் கொள்கையும் மூக்கறுபட்டு நிற்கப் போகிறது. மொழி தேர்வு எது; மொழி திணிப்பு எது என்பது எங்களுக்கு தெரியும். இந்த நாடகங்கள் எல்லாம் இங்கே எடுபடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



-நமது நிருபர்-






      Dinamalar
      Follow us