ADDED : செப் 08, 2024 04:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அடுத்த மாதம் 5ம் தேதி ஹரியானா சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு தற்போது பா.ஜ., ஆட்சி நடைபெறுகிறது. இங்கு, கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக செயல்பட்டு வரும் காங்கிரஸ், இந்த முறை எப்படியும் ஆட்சியைப் பிடிக்க கடுமையாக முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் நடந்த ஒலிம்பிக்கில் பங்கேற்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தும், சக மல்யுத்த வீரருமான பஜ்ரங் புனியாவும் காங்கிரஸ் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட உள்ளனர். 'ஹரியானாவைச் சேர்ந்த இவர்கள் இருவரும் காங்., மீண்டும் ஆட்சியைப் பிடிக்க உதவுவர்' என காங்., தலைவர்கள் பரபரப்பாக பேசிக் கொள்கின்றனர்.