sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில் அணைகளை துார் வாரலாமே!

/

நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில் அணைகளை துார் வாரலாமே!

நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில் அணைகளை துார் வாரலாமே!

நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில் அணைகளை துார் வாரலாமே!

12


ADDED : மே 06, 2024 12:59 AM

Google News

ADDED : மே 06, 2024 12:59 AM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான அணைகள் வறண்டு விட்டன. பரிசல் பயணிக்க வேண்டிய அணையில், பஸ் போக்குவரத்து துவங்கியுள்ளது.

குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இப்போதே இப்படி என்றால், வரும் காலத்தை, எப்படி சமாளிப்பது என்பது, பொதுமக்களின் கேள்வி.

இந்நிலை மீண்டும் திரும்பக் கூடாது என்றால், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. வரும் நாட்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் துவங்கவுள்ள நிலையில், வறண்டிருக்கும் அணைகளில், அதன் நீர் வழிப்பாதைகளில், தற்போது துார் வார வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அரசின் வழிகாட்டுதலுடன், துார் வாரும் நடவடிக்கையை, பொதுமக்கள் ஒவ்வொருவரும் பங்கேற்கும் வகையில், மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை மக்கள் உணர்ந்துள்ள நிலையில், இதுகுறித்து கூடுதலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி, மழை வரும் என கணிக்கப்பட்ட நாட்களுக்குள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் இணைப்பு ஏற்படுத்தி, பொதுமக்களை பங்கேற்க செய்யும் வகையில், வெயில் வாட்டாத காலை, மாலை என ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள், இந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

அணைகளில் எடுக்கப்படும் மண்ணை, விவசாயிகளுக்கு வழங்கினால், விவசாய நிலங்களில் இம்மண்ணை பரப்பி விடும் போது, மண்ணுக்கு நுண்ணுாட்ட சத்து அதிகளவில் கிடைக்கும். மழை காலங்களில், நீரை தேக்கி வைக்கவும் முடியும்.

ஜூனில் தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கு முன், நீராதாரங்களில் நீரை சேமிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் போது, நிலத்தடி நீர் மட்டமும் உயரும்.

அ.தி.மு.க., ஆட்சியில், ஆறு, குளங்கள், குட்டைகளில், மழை காலங்களில் நீர் தேங்கும் வகையில், குடிமராமத்து திட்டம் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தி.மு.க., ஆட்சியில் அத்திட்டம் கண்டுகொள்ளப்படவில்லை.

இதையும் சரியாக கையாண்டால், மக்களுக்கான நீர் தேவை நிறைவேற்றப்படும். ஊர் கூடி தேர் இழுத்தால் நிச்சயம் இத்திட்டம் வெற்றி பெறும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

அமராவதி அணையில் 20 அடிக்கு வண்டல்

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே 1958ல் கட்டபட்ட அமராவதி அணை, 4 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. ஆண்டுக்கு, 10 டி.எம்.சி., நீர் பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது. அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆற்றின் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.அணை பயனுக்கு வந்து, 65 ஆண்டுகளாக துார் வாரப்படாததால், வண்டல் மண் படிந்துள்ளது. 90 அடி உயரமுள்ள அணையில், 4,047 மில்லியன் கன அடி நீர் தேக்க முடியும். அணையில், 20 சதவீதம் வரை, மண் பரப்பாக மாறியுள்ளது. அணை மொத்த கொள்ளளவில், 800 மில்லியன் கனஅடி வரை நீர் தேக்க முடியாமல், வீணாக வெளியேற்றும் நிலை உள்ளது. மழை காலத்தில் அணை நிரம்பி, பல டி.எம்.சி., நீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது. அணையில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை துார்வாரவும், முழு கொள்ளளவுக்கு நீர் தேக்க வேண்டும், எனவும் விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.கடந்த, 2021 ஆகஸ்டில், தமிழக அரசு பட்ஜெட்டில், மேட்டூர், வைகை, அமராவதி அணைகள் துார்வாரப்பட்டு, பழைய கொள்ளளவு நிலைக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது. மூன்று ஆண்டாகியும், இத்திட்டம் நடைமுறைக்கு வராமல் உள்ளது.விவசாயிகள் கூறியதாவது:அணையை துார்வாரினால், கூடுதல் நீர் சேமிக்க முடியும். ரசாயன உரங்கள் பயன்பாட்டால், விவசாய நிலங்களில் மண் வளம் குறைந்துள்ளன. அணையின் வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துக்கொள்ள அனுமதியளித்தால், அணையும் ஆழமாகும்; விளை நிலங்களும் வளமாகும். அதேபோல், பெரும்பாலான பகுதிகளில், மணல் குவிந்துள்ளது. இவற்றால், அரசுக்கு வருவாய் கிடைக்கும். நீர் வளத்துறை, வனத்துறை, வருவாய்த்துறை இணைந்து, அணை துார்வாரும் பணியை துவக்க, ஒரே உத்தரவாக வெளியிட்டு, உடனடியாக செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.அதிகாரிகள் கூறுகையில், 'அணை நீர் தேங்கும் பரப்பில், வனத்துறைக்கு சொந்தமான நிலமும் உள்ளதால் அனுமதி பெற வேண்டும். இதற்கு, 1.5 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்ற வனத்துறையின் பல்வேறு நிபந்தனைகளால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது, 39.67 அடி நீர் மட்டம் இருந்தாலும், அதில், 20 அடி வரை வண்டல் மண் மட்டுமே உள்ளது. நீர் மட்டம் குறைந்துள்ளதால், துார்வாருவது குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளோம்' என்றனர்.



26 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிவு!

தமிழகத்தில் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த ஏப்ரலில், 26 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக சரிந்துள்ளது. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சற்றே உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், திருவாரூர் தவிர, அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் சரிவை கண்டுள்ளது.



26 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிவு!

தமிழகத்தில் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த ஏப்ரலில், 26 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக சரிந்துள்ளது. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சற்றே உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், திருவாரூர் தவிர, அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் சரிவை கண்டுள்ளது.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us