sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

தி.மு.க.,வுக்கு 23; கூட்டணிக்கு 17: தேர்தல் குழுவுடன் ஸ்டாலின் ஆலோசனை

/

தி.மு.க.,வுக்கு 23; கூட்டணிக்கு 17: தேர்தல் குழுவுடன் ஸ்டாலின் ஆலோசனை

தி.மு.க.,வுக்கு 23; கூட்டணிக்கு 17: தேர்தல் குழுவுடன் ஸ்டாலின் ஆலோசனை

தி.மு.க.,வுக்கு 23; கூட்டணிக்கு 17: தேர்தல் குழுவுடன் ஸ்டாலின் ஆலோசனை


ADDED : மார் 06, 2024 04:48 AM

Google News

ADDED : மார் 06, 2024 04:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : புதுச்சேரி உட்பட, 23 தொகுதிகளில் தி.மு.க.,வும், மீதமுள்ள, 17 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளும் போட்டியிடுவது குறித்து, கட்சியின் தேர்தல் பணி குழுவினருடன், நேற்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்திய தகவல் வெளியாகி உள்ளது.

தி.மு.க., கூட்டணியில், முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரமும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆனால், எந்த தொகுதி என்பதை அறிவிக்கவில்லை. காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்கு எத்தனை, 'சீட்' என்பது இன்னும் முடிவாகவில்லை.

இந்நிலையில், சென்னை அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.பி.,க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

அதுபற்றி, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க., மட்டும், 21 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளையும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, தி.மு.க., கணக்கில், 23 தொகுதிகள் சேரும்.

காங்கிரஸ் கட்சிக்கு எட்டு தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திருவள்ளூர், சிதம்பரம் என, இரு தொகுதிகளும் தரப்படும். அக்கட்சிகள் தங்கள் சொந்த சின்னத்தில் போட்டியிடலாம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வடசென்னை, மதுரை; இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம் ஒதுக்கலாம் என முடிவாகி உள்ளது.

ம.தி.மு.க.,வுக்கு திருச்சி தொகுதியும், ஒரு ராஜ்யசபா சீட்டும் தரலாம் என்றும், அதேபோல, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் கோவை தொகுதி தரவும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியுடனும், நாளை காங்கிரஸ் கட்சியுடனும் பேச்சு நடத்தப்படுகிறது. இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.






      Dinamalar
      Follow us