sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

தற்போதுள்ள நிலை நீடித்தால் 50 சதவீத குவாரிகள் விரைவில் மூடப்படும்!

/

தற்போதுள்ள நிலை நீடித்தால் 50 சதவீத குவாரிகள் விரைவில் மூடப்படும்!

தற்போதுள்ள நிலை நீடித்தால் 50 சதவீத குவாரிகள் விரைவில் மூடப்படும்!

தற்போதுள்ள நிலை நீடித்தால் 50 சதவீத குவாரிகள் விரைவில் மூடப்படும்!


ADDED : ஜன 26, 2024 06:32 AM

Google News

ADDED : ஜன 26, 2024 06:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜல்லி எம்.சாண்ட் மற்றும் பி.சாண்ட் அடிக்கடி விலை உயர்வதற்கு குவாரிகளின் உற்பத்திக்கான அனுமதியை தமிழக அரசு அதிகரித்துத் தர மறுப்பதே காரணமென்று குவாரிகள் உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

கோவை மாவட்டத்தில், கட்டுமானத் துறை அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அதேபோல, மத்திய, மாநில அரசுகளின் சார்பில், பல ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளும் நடந்து வருகின்றன. இவற்றுக்கு ஜல்லி, எம்.சாண்ட் மற்றும் பி.சாண்ட் தேவை மிக அதிகமாகவுள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்குள் இவற்றின் விலை, இரண்டு முறை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்து, கோவை மாவட்ட குவாரிகள் மற்றும் கிரசர்கள் சங்கத் தலைவர் சந்திரபிரகாஷ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது:

வரும் பிப் 1 லிருந்து ப்ளூ மெட்டல், எம்.சாண்ட், பி.சாண்ட் 10 சதவீதம் விலை உயர்த்தப்படுகிறது. உற்பத்திக் குறைவே, இதற்குக் காரணம். என்னுடைய கிரசரில் மணிக்கு 400 டன் உற்பத்தி செய்ய முடியும்; ஆனால் 100 டன் அதாவது 25 சதவீதம் உற்பத்தி செய்யவே அரசு அனுமதிக்கிறது. எனக்கு நான்கு மாநிலங்களில் கிரசர் இருக்கிறது; ஆனால் வேறு எங்கும் இந்தக் கட்டுப்பாடு கிடையாது.

இது மாநில அரசின் தவறில்லை; கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு, தொலைநோக்கு இல்லை. மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல, இங்கும் அனுமதி வழங்க வேண்டுமென்று கோரினோம். ஆனால் அவர்கள் அங்கு போய்ப் பார்த்து விட்டு வந்து, உற்பத்திக்கான அனுமதியை அதிகரிக்காமல், 'ராயல்டி' தொகையை இரட்டிப்பாக்கி விட்டார்கள்.

இதைச்செலுத்த நாங்கள் தயார். ஆனால் உற்பத்திக்கான அனுமதியை அதிகரிக்க வேண்டியது அவசியம். இப்போது நான்கில் ஒரு பங்கு மட்டுமே உற்பத்தி செய்வதோடு, 'ராயல்டி' தொகையை இரு மடங்கு செலுத்த வேண்டியுள்ளது; மின் கட்டணம், தொழிலாளர் பற்றாக்குறை, ஜி.எஸ்.டி., அனைத்துமே அதிகரித்துள்ளது. அதனால் தான், விலையை உயர்த்த வேண்டியகட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் வரை தொழில் செய்யும் எங்களைப் போன்ற சிறு, குறு தொழில் முனைவோரை, தமிழக ஜி.எஸ்.டி., அதிகாரிகள், எதிரிகளாகப் பார்க்கின்றனர். ஜி.எஸ்.டி., அதிகாரிகளின் போக்கைக் கண்டித்து, தமிழகம் தழுவிய போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். இதே நிலை, நீடித்தால், தமிழகத்தில் 50 சதவீத குவாரிகள் விரைவில் மூடப்படும்.

இத்தொழிலில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய, அரசு அமைத்துள்ள கமிட்டியில் சங்க பிரதிநிதிகளின் கருத்தையும் கேட்க வேண்டும். குவாரி, கிரசர்களின் உற்பத்திக்கான அனுமதியை அதிகரிப்பதே ஒரே தீர்வு. அப்படிக் கொடுத்தால், இப்போது இருப்பதை விட, 30 சதவீதம் வரை, ஜல்லி, எம்.சாண்ட். பி.சாண்ட் விலையைக் குறைக்க முடியும்.இவ்வாறு அவர் அதில் பேசியுள்ளார்.

கனிம வளப்பகுதியை பாதுகாக்க வேண்டும்!

சந்திரபிரகாஷ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது:மற்ற மாநிலங்களில், கனிம வளம் மிக்க பகுதிகளைப் பாதுகாக்கின்றனர். ஆனால் தமிழகத்தில், இந்தப் பகுதிகளைப் பாதுகாக்காமல், வளர்ச்சிப் பணிகளை அனுமதிக்கின்றனர். இதே நிலை தொடரும்பட்சத்தில், இன்னும் ஐந்தாண்டுகளில், ஜல்லியை தென் ஆப்ரிக்காவில் இருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும். இப்போது 10 சதவீதம் உயர்த்தினாலே, மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். அப்போது 5 மடங்கு அதிக விலை தர வேண்டியிருக்கும். கட்டுமானச் செலவில் இப்போது ஐந்து சதவீதமாகவும், சாலைப்பணிகளில் 30 சதவீதமாகவும் இருக்கும் ப்ளூமெட்டல் விலை, ஐந்து மடங்கு அதிகமாகும். கட்டடம், ரோடு போடும் செலவு3 மடங்கு அதிகமாகி விடும்.



-நமது சிறப்பு நிருபர்-






      Dinamalar
      Follow us