sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

வயது 73 ஆனாலும் இளமை புதுமை இனிமை!

/

வயது 73 ஆனாலும் இளமை புதுமை இனிமை!

வயது 73 ஆனாலும் இளமை புதுமை இனிமை!

வயது 73 ஆனாலும் இளமை புதுமை இனிமை!

12


UPDATED : செப் 06, 2024 10:56 AM

ADDED : செப் 06, 2024 06:40 AM

Google News

UPDATED : செப் 06, 2024 10:56 AM ADDED : செப் 06, 2024 06:40 AM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்று(செப்.,6) தினமலர் நாளிதழுக்கு வயது 73. தமிழ் மக்களால் அன்றும், இன்றும், என்றும் கொண்டாடப்படும், தினமலர் நாளிதழ், 1951ம் ஆண்டு செப்., 6ம் தேதி, திருவாங்கூர் சமஸ்தானத்தின் (இன்றைய கேரளா) தலைநகரான திருவனந்தபுரத்தில் மலர்ந்தது.

திருவாங்கூர் - கொச்சி, நாஞ்சில் நாட்டு தமிழ் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண, போர் வாளாக, காகித ஆயுதமாக, உருவெடுத்த தினமலர் நாளிதழ், தனது வேர்களை பரப்பி இன்று ஆல விருட்சமாக, தமிழ் பேசும் நல் உலகில், வாசகர் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளது. காலாகாலங்களில் மாறி வரும் அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப, தினமலர் நாளிதழ் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் தன்னை புதுமைப்படுத்தி, இளமை குன்றாமல், அனைத்து தரப்பு வாசகர்களையும் ஈர்த்து வருகிறது.

காலை எழுந்த உடன் தினமலர் நாளிதழில் கண் விழிக்கும் லட்சக்கணக்கான வாசகர்கள், தங்கள் வாழ்வின் அங்கமாக கருதுகின்றனர். புயல், மழை, பனி, வெயில் என, எந்த பருவ காலமாக இருந்தாலும், தினமலர் நாளிதழை ஒவ்வொரு வீட்டு வாசலிலும், ஆண்டு முழுவதும் கொண்டு சேர்க்கும் தினமலர் முகவர்கள், வினியோகிப்பாளர்களை இந்த நன்னாளில் நினைவுகூர்ந்து, நன்றியுடன் பாராட்டுகிறோம். தினமலர் நாளிதழ் குறித்த தங்கள் அனுபவங்களை, இங்கு வாசகர்கள், ஏஜன்ட்கள், லைன்பாய்ஸ் பகிர்ந்து கொள்கின்றனர்.

தினமலர் பலம் தைரியம்


நான் பேரூர் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக தினமலர் ஏஜென்சி நடத்தி கொண்டிருக்கின்றேன். தவறுகளை சுட்டி காட்டுவதும், சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் செயல்களையும் தைரியமாக எடுத்துரைப்பதும், தினமலரின் மிக முக்கியமான பலம். ஜாதி, மதம், அரசியல் பாகுபாடின்றி செய்திகளை பிரசுரம் செய்வது, தேர்தல் காலங்களில் மிக சிறப்பாக கணித்து பிரசுரம் செய்வது இதன் சிறப்பு. இரண்டு தினமலர் என்ற ஒரு புதிய யுக்தியை தினமலர் கொண்டுவந்தது.

- நடராஜன், 61, ஏஜென்ட், பேரூர்.

Image 1317598

தினமலருடன் வளரும் நான்


1992ம் ஆண்டில் இருந்து, வடவள்ளி பகுதியில் தினமலர் நாளிதழ் முகவராக உள்ளேன். நான் வெறும், 20 நாளிதழில் துவங்கி, தற்போது, தினமலருடன், நானும் வளர்ந்துள்ளேன். தற்போது, வடவள்ளி பகுதியில், அதிகம் விற்பனையாகும் நாளிதழாக தினமலர் உள்ளது. தினமலர் நாளிதழ், 74ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தினமலர் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

- பாலாஜி,48, ஏஜென்ட், வடவள்ளி.

என் உயிரில் கலந்த 'தினமலர்'


கடந்த, 40 ஆண்டுகளுக்கு மேலாக தினமலர் உடன் பயணித்து வருகிறேன். என் உயிரில் கலந்தது தினமலர். என் வாழ்க்கையில், பல்வேறு வளர்ச்சியில் தினமலர் தொடர்ந்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய பொருளாதார உயர்வு, வளர்ச்சி என, அனைத்துக்கும் தினமலர் தான் முக்கிய காரணம். தினமலரின் துணிச்சலான செய்திகளால் தான், ஏராளமான வாசகர்கள் இன்றைக்கும் உள்ளனர். இன்றும் தொடர்ந்து பயணித்து வருகிறேன். இன்னும் பல்வேறு உச்சத்தை தினமலர் எட்ட வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை.

- பழனிசாமி, திருப்பூர்.

Image 1317600

தரத்தில் என்றுமே முதலிடம்


எங்களைப் போன்ற ஆயிரக்கணக்கானோருக்கு தொழில் கொடுத்திட்ட தினமலர் நாளிதழுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று வரை தினமலர் நிறுவனத்தினரின் விதிமுறைகளை முறையாக பின்பற்றி வாசகர்களிடையே நாளிதழை கொண்டு சேர்த்து வருகிறேன். முன்பு இருந்ததை விட தற்போது தினமலர் வாசகர்கள் அதிகரித்துள்ளனர். பல்வேறு கோணங்களில் செய்திகளை முந்தி தருவதாலும் பதிப்பில் தரத்தை கடைபிடிப்பதாலும் வாசகர்களிடையே நற்பெயர் என்றுமே தினமலருக்கு உண்டு.

- பழனிசாமி, அவிநாசி.

மக்கள் விரும்பும் நாளிதழ்


கடந்த, 35 ஆண்டுகளாக, ஏஜென்டாக உள்ளேன். ஆரம்பம் முதல் இன்று வரை அரசியல் முதல் அனைத்து விஷயங்களிலும் உண்மையை வெளிக்கொண்டு வரும் நாளிதழாக உள்ளது. நாளிதழ் மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்றுள்ளது. ஆன்மிகம், விவசாய மலர், முன்னோடி அரசு திட்டங்கள் என அனைத்து விஷயங்களும் உள்ளதால், அனைத்து தரப்பு மக்களும் விரும்புகின்றனர். மக்கள் விரும்பி வாங்கி படிக்கும் நாளிதழாக உள்ளது. இந்த பந்தம் என்றும் தொடரும்.

--- எம்.குமார், 53, ரங்கசமுத்திரம்.

Image 1317595

பக்க வடிவமைப்பு 'சூப்பர்'


கடந்த, 15 ஆண்டுகளுக்கு மேலாக, 'தினமலர்' ஏஜென்டாக உள்ளேன். 'தினமலர்' நாளிதழில் ஆன்மிகத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.ஆன்மிக செய்திகள் அதிகளவு வருவதால், பலரும் விரும்பி படிக்கின்றனர். வாரமலர், சிறுவர் மலர் என சிறுவர்கள், குடும்பத்தினரை கவரும் நாளிதழாக உள்ளது. மக்கள் விரும்பி படிக்க கூடிய அதிக தகவல்களும் இடம் பெற்றுள்ளன. 'தினமலர்' பக்க வடிவமைப்பும், வெளியாகக்கூடிய போட்டோக்களும் மிக அருமையாக உள்ளன. 'தினமலர்' நாளிதழின் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்.

- பி.தண்டபாணி, 65, பொள்ளாச்சி டவுன்.

தீர்வை தரும் தினமலர்


கடந்த, 1980ம் ஆண்டில் இருந்து, ஏஜென்டாக உள்ளேன். செய்திகள் அனைத்தும் அருமையாக உள்ளது. மக்களுக்கான அடிப்படை பிரச்னைகள், அதற்கு தீர்வு காண்பது; மக்களின் கோரிக்கைகளை அதிகாரிகளிடம் கொண்டு சேர்க்க கூடிய நாளிதழாக 'தினமலர்' உள்ளது. பல ஆண்டுகளாக தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கும் செய்தி வெளியிட்டு தீர்வு கண்டுள்ளது. ஏதாவது பிரச்னைகள், அதற்கு தீர்வு வேண்டுமென்றால் 'தினமலர்' நாளிதழில் தெரிவித்தால் போதும் என்ற மனநிலை மக்களிடம் உள்ளது. மேலும் வளர்ச்சியை நோக்கி நாளிதழ் செல்ல வாழ்த்துகிறேன்.

- எஸ்.தண்டபாணி, 64, தென்றல் நகர், பொள்ளாச்சி.

வாழ வைக்கும் தினமலர்


கடந்த, 40 ஆண்டுகளாக, ஊட்டியில் பேப்பர் ஏஜென்டாக உள்ளேன். அதில், 'தினமலர்' நாளிதழ் ஏஜென்டாக, கடந்த 25 ஆண்டுகளாக உள்ளேன். வாசகர்களின் செய்தி எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், கடைகள், வீடுகளுக்கு உடனுக்குடன் கொண்டு சேர்த்து வருகிறேன். எனக்கு வேறு எந்த தொழிலும் கிடையாது. தற்போது, எனது மகள் அமெரிக்க பல்கலைக் கழகத்தில் மென்பொருள் குறித்த படிப்பை பயின்று வருகிறார். இதற்கு 'தினமலர்' தான் காரணம். என்னையும், என் குடும்பத்தையும் வாழ வைக்கும் தினமலர் நாளிதழுக்கு நன்றி.

-- சுரேஷ், ஏஜென்ட், -ஊட்டி

Image 1317596

வாசகர்கள் என் நண்பர்கள்


நான், 1974 முதல், மதுரை, ஈரோடு, கோவை பதிப்புகளில், 50 ஆண்டுகள் ஏஜென்ட்டாக உள்ளேன். தினமலர் நாளிதழ் விற்பனை செய்வதால், ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் வியாபாரிகள் என, ஆயிரக்கணக்கான வாசகர்கள், நண்பர்களாக கிடைத்துள்ளனர். எனது இல்ல விசேஷங்களுக்கு தினமலர் குடும்பம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த பணியால் இதுவரை, பல நாடுகளுக்கு பயணம் செய்துள்ளேன். எனது குடும்பத்தாரின் பெயரிலேயே ஏஜென்சி நடத்தி வருகிறேன். எனக்கு வயது,74. அதிகாலை, 4:00 மணிமுதல் பணியில் ஈடுபடுவதால் ஆரோக்கியமாக இருக்கிறேன்.

- -- -தங்கவேல், தமிழாசிரியர் ஓய்வு, ஏஜென்ட், கோத்தகிரி

விற்பனையில் மன நிறைவு


கடந்த, 45 ஆண்டுகளாக தினமலர் ஏஜென்டாக உள்ளோம். தற்போது செய்திகள் மற்றும் அதனை சார்ந்த புகைப்படங்கள், புதிய செய்திகள் மற்றும் கிராமப்புற செய்திகள் அதிகளவில் வெளியாகி வருவதால், மக்கள் மத்தியில் தினமலர் மீதான வரவேற்பு அதிகரித்து உள்ளது. இதனால், தினமலர் விற்பனை செய்வதில் ஒரு மன நிறைவு ஏற்படுகிறது. சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகும் போது, பலரின் மிரட்டலுக்கும் உள்ளாகி உள்ளோம். என்றாலும், தினமலர் விற்பனையை கைவிடாமல் மன தைரியத்துடன், தொடர்ந்து வருகிறோம்.

---- நாராயணி, ஏஜென்ட், பந்தலுார்

Image 1317597

தன்னம்பிக்கை அளிக்கிறது


ஒரு பெண்ணாக, வெளி உலகம் தெரியாமல் இருந்த நிலையில், 'தினமலர்' நாளிதழ் வினியோக பணியில் இணைந்து கொண்டேன். அன்று முதல், எனக்கு ஊக்கமும், தன்னம்பிக்கையும், உற்சாகம் அளிக்கும் பணியாக மாறியுள்ளது. சொல்கிறார்கள், மகளிர் பக்கம், விளையாட்டு செய்தி, உலகம் முதல் உள்ளூர் செய்திகள் என அனைத்து தரப்பினருக்கும், பயனுள்ள, நேர்மையான, தரமான செய்திகள் வழங்குவதோடு மட்டுமன்றி, அருமையாக பேப்பர், அழகான போட்டோக்கள், பக்க வடிவமைப்பு, 74வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாரம்பரியம் மிக்க, 'தினமலர்' நாளிதழ் ஏஜென்ட் என்பதில் பெருமை கொள்கிறேன்.

- ஆர். சாந்தாமணி, ஏஜென்ட், மடத்துக்குளம்.

வாசகர்கள் எதிர்பார்க்கும் நாளிதழ்


'தினமலர்' நாளிதழ், வினியோகிக்கும் பணியில், 14 வயது முதல், தற்போது, 56 வயது வரை, ஈடுபட்டு வருகிறேன். தொழில் நுட்ப வளர்ச்சி இல்லாத காலம் முதல், இன்று வரை, ஒவ்வொரு நாளும் வாசகர்கள் எதிர்பார்க்கும் ஒரு தரமான நாளிதழாக 'ஜொலித்து' வருகிறது. மக்களுக்கு தேவையான அனைத்து பணிகளையும், செய்திகள் வாயிலாக நிறைவு செய்து வருகிறது.

- எஸ்.மோகன்ராஜ், ஏஜென்ட், வெஞ்சமடை, உடுமலை.

அறிவுக்கு விருந்து


கடந்த, 32 ஆண்டுகளாக 'தினமலர்' நாளிதழின் வாசகர் நான். நாளிதழில் ஒவ்வொரு விஷயமும் தனித்துவமாக உள்ளது. அறிவுள்ளவர்கள் அனைவராலும் விரும்பப்படும் நாளிதழ். நடுத்தர மக்களின் கருத்துக்களை பிரதிபலிக்கிறது. ஆன்மிகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை அனைவரிடத்திலும் கொண்டு சேர்ப்பது மிகப்பெரிய விசயம். தினமலரில் வரும் பட்டம் பகுதியில் வரும் கருத்துக்கள் அனைத்தும் அருமை. மாணவர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. தொடர்ந்து படிப்பதால், அறிவுக்கு விருந்தாக உள்ளது.

- - ஸ்ரீ வெங்கடசர்மா, வாசகர், சிங்காநல்லுார்.

Image 1317601

பா.கே.ப., மிகவும் பிடிக்கும்


நாங்கள் மதுரையில் இருந்து கோவை வந்தவர்கள். மாத சந்தா செலுத்தி தினமலர் நாளிதழ் படித்து வருகிறோம். 365 நாட்களும் வரக்கூடிய ஒரே சிறப்பு மிக்க நாளிதழ் தினமலர் மட்டும்தான். நான் மட்டுமல்ல; வீட்டில் உள்ளவர்களும் தவறாமல் படித்து வருகிறார்கள். டிஜிட்டலிலும் படித்து வருகிறார்கள். மக்கள் பிரச்னைகளை நடுநிலையோடு வெளியிடும் ஒரே நாளிதழ் தினமலர் தான். சிறுவர் மலர், வாரமலர் அனைத்தும் சிறப்பாக உள்ளது. அந்துமணியின் பா.கே.ப., எனக்கு மிகவும் பிடிக்கும். தினமலர் நாளிதழ் எங்களது குடும்பத்தில் ஒரு அங்கமாக உள்ளது.

- சுசிலாதேவி, 65, ஆவாரம்பாளையம்.

365 நாளும் வருவது சிறப்பு


எங்கள் வீட்டில் கடந்த 15 ஆண்டுகளாக, தினமலர் நாளிதழ் வாங்கி வருகிறோம். மக்கள் பிரச்னையை ஆதாரங்களுடனும், தரவுகளுடனும் வெளியிட்டு, தீர்வு காண்கிறது. அரசியல், அரசு துறைகள், பொதுமக்கள் பிரச்னை என, அனைத்திலும் நடுநிலைமையோடு செய்தி வெளியிடுகிறது. 365 நாட்களும் வெளிவரும் தினமலர் நாளிதழை, வாசிக்காவிட்டால், அன்றைய நாள் நிறைவானதாக இருக்காது. ஆன்மிக மலர், வாரமலர் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. குறுக்கெழுத்தால் அறிவையும் வளர்க்க முடிகிறது.

- மணிமாலா,60. இல்லத்தரசி, ஆறுமுககவுண்டனுார்.

பாரம்பரியமாக தொடரும் பந்தம்


எனது தந்தை வாசகராக இருந்து, நான் சிறுவனாக, இருக்கும் போது, 'தினமலர்- சிறுவர் மலர்' வாசிக்கத்துவங்கி, இன்றளவும், தொடரும் பந்தமாக உள்ளது. நாட்டின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு, அரசியல் கட்சியினர், ஆளும் தரப்பினர், அதிகாரிகள் என யாராக இருந்தாலும், தவறுகளை தைரியமாக சுட்டிக்காட்டி வருவதில் மற்ற நாளிதழ்களை விட மிகவும் சிறப்பானதாக இன்றளவும் உள்ளது.

- என். நாகமணி, 57, மளிகை கடை உரிமையாளர், சோமவாரபட்டி.

Image 1317602

நாளும் தேவையான நாளிதழ்


உலகம் முதல் உள்ளூர் வரை, செய்திகள், நாட்டு நடப்புகள் என அனைத்து விஷயங்களையும் எனக்கு வழங்கிய அறிவுப்பெட்டகம்; 'தினமலர்' இல்லாமல், எனது காலை பொழுது விடியாது.நடுநிலையோடு, தவறுகளை தட்டிக்கேட்கும் பாங்கு, சிறப்பான செயல்களை பாராட்டுவது என தடம் மாறாமல் பயணிக்கிறது. வாரமலர், குறுக்கெழுத்து போட்டி என, ஒவ்வொரு பகுதியும் பயனுள்ளதாகும். கம்ப்யூட்டர் மலர் பகுதியை விரும்பி படித்தேன். இன்றைய இளைய தலைமுறையும் வாசிப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.

- டி. வஜ்ரவேல், ஓய்வு பெற்ற மருந்தாளுநர், பெரியகோட்டை, உடுமலை

'தினமலருக்கு நிகர் தினமலர்


40 ஆண்டுகளாக தினமலருடன் பயணித்து வருகிறேன். அரசியல், ஆன்மிகம், விளையாட்டு, கல்வி, நாட்டு நடப்புகள் என அனைத்திலும் நடுநிலையான பத்திரிகையாக இருப்பதில், 'தினமலருக்கு நிகர் தினமலர்' மட்டும்தான். படிப்பதற்கு எளிமையாகவும், அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் வார்த்தைகள் உள்ளன. நாளிதழ் படித்து முடித்தவுடன் பொழுதுபோக்க நினைத்தாலும் அதற்கும் குறுக்கெழுத்து பகுதி என தினமலரில் உள்ளது.

- மணி, தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர், உடுமலை சுற்றுசூழல் சங்க தலைவர்.

வாழ்வின் ஒரு பகுதி


கடந்த, 40 ஆண்டுகளாக 'தினமலர்' நாளிதழ் வாங்கி, முழுமையாக வசிப்பேன். காலை, 5:30 மணிக்கு எழுந்தவுடன், முதலில் படித்து விட்டு தான், மற்ற பணிகளை மேற்கொள்வேன். ஜோதிடம், நட்சத்திரங்கள் குறித்த கட்டுரை, வாரமலர் ஆகியவற்றை விரும்பி படிப்பேன். நான் வாங்கி படிப்பது மட்டுமல்லாமல், பலரையும் 'தினமலர்' வாசகராக மாற்றியுள்ளேன். மிகவும் நேர்த்தியான, உண்மையான செய்திகள் தினமலர் நாளிதழில் மட்டும் தான் படிக்க முடியும். இன்னும் மென்மேலும் வளர்ந்து பல மகுடங்களை, 'தினமலர்' சூட வேண்டும்.

- அம்பலவாணன், கொங்கு மெயின் ரோடு, திருப்பூர்.

Image 1317599

நடுநிலையான செய்திகள்


கடந்த, 28 ஆண்டுகளாக, 'தினமலர்' வாசகராக இருந்து வருகிறேன். நிறைய நாளிதழ் இருந்தாலும், 'தினமலர்' என்றைக்கும் தனித்துவம் வாய்ந்தது. மக்களின் அனைத்து பிரச்னைகளை அரசுக்கு எடுத்து கூறுவதும், அரசியல் செய்திகள் என, அனைத்து செய்திகளையும் நடுநிலையாக வழங்குவதில் முன்னிலையாக உள்ளது. டீக்கடை பெஞ்ச், அரசியல் கட்டுரைகள், வாரமலர் போன்றவற்றை விரும்பி படித்து வருகிறேன்.

- மூர்த்தி, சந்திராபுரம்.

விரும்பி படிக்கும் நாளிதழ்


கடந்த, 20 ஆண்டுகளாக 'தினமலர்' நாளிதழ் வாங்கி வருகிறோம். குடும்பத்தில் அனைவரும் படிப்போம். மற்ற நாளிதழ்களை காட்டிலும், செய்திகள் படிக்க மிகவும் எளிமையாக, புரியும் வகையில் இருக்கும். அனைத்து பகுதிகளும் பிடிக்கும். குறிப்பாக, வாரமலர் பிடிக்கும். உள்ளூர் மற்றும் வெளியூர் செய்திகள் சிறப்பாக வருகிறது. மக்கள் பிரச்னைகள் போன்றவற்றை துணிச்சலாக வழங்கி வருகிறது.

- கவுசல்யா தேவி, குன்னாங்கல்பாளையம்.

அன்று முதல் இன்று வரை...


இன்றைய நவீன உலகத்தில், செய்திகள், வரலாறுகளை தெரிந்து கொள்ள ஏராளமான வசதிகள் இருந்தாலும், உண்மை செய்திகளுக்கு 'தினமலர்' மட்டுமே உள்ளது. பாடப்புத்தகங்களை தாண்டி, மாணவர்கள் சிந்திக்கவும், செய்திகளை அறிந்து கொள்ளவும், எங்கள் காலத்தில் சிறந்த ஊடகமாக 'தினமலர்' இருந்தது. இதிலிருந்தே, மாணவர்களுக்கு செய்திகளை கொண்டு போய் சேர்த்தோம். இன்றும், அரசியல், மகளிர், இளைஞர்கள், தொழில் முனைவோர் என பல தரப்பினருக்கும் பயனுள்ளதாக உள்ளது.

--வெ. அழகம்மாள்,86, ஆசிரியை ஓய்வு, அண்ணா குடியிருப்பு, உடுமலை.






      Dinamalar
      Follow us