ADDED : ஜன 07, 2024 04:16 AM

தமிழக அரசியல் நிலை காரணமாக, தமிழக அதிகாரிகள் சிலர் டில்லிக்கு மாற்றலாக விரும்புகின்றனராம். டில்லியில் உள்ள சீனியர் அதிகாரிகளிடம், 'தமிழக அமைச்சர்கள், எங்களை மட்டமாக நடத்துகின்றனர்' என, புலம்புகின்றனர். வாய்ப்பு கிடைத்தால் டில்லிக்கு மாற்றலாகவும், இவர்கள் விருப்பம் தெரிவித்துஉள்ளனராம்.
குறிப்பாக, ஒரு தமிழக அமைச்சரை பற்றி தான், இந்த அதிகாரிகள் அதிகமாக பேசுகின்றனர். வயதில் இளையவரான அந்த அமைச்சர், அதிகாரிகளின் வயது வித்தியாசம் கூட பார்க்காமல், ஒருமையில் பேசுகிறாராம். அதாவது போகட்டும் என்றால், கெட்ட வார்த்தைகளைச் சொல்லி திட்டுகிறாராம். காதால் கேட்க முடியாத அளவுக்கு, இந்த வசவுகளை வாங்கும் அதிகாரிகள், அதிர்ச்சியில் உறைந்துள்ளனராம்.
புகைப்படத்திற்கு, 'போஸ்' கொடுக்கும் போது, ஏதோ நல்லவர், வல்லவர் போல காணப்படும் அந்த அமைச்சர்,பாரம்பரிய குடும்பத்தைச் சார்ந்தவர். 'இப்படி கண்டபடிபேசலாமா... சக அமைச்சர்கள் இவரை திருத்த மாட்டார்களா' என, ஏங்குகின்றனராம் அதிகாரிகள்.