பெரிய பதவிகள் கிடைக்கும்: உற்சாகப்படுத்திய அமித் ஷா
பெரிய பதவிகள் கிடைக்கும்: உற்சாகப்படுத்திய அமித் ஷா
ADDED : ஆக 25, 2025 02:09 AM

சென்னை: 'சட்டசபை தேர்தலில், கடுமையாக உழைப்பவர்களுக்கு பெரிய பதவிகள் தேடி வரும்' என, தமிழக பா.ஜ., நிர்வாகிகளிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில், அமித் ஷா உறுதியாக உள்ளார். தமிழகத்தில் பா.ஜ.,வை பலப்படுத்தும் முயற்சியிலும் ஆர்வம் காட்டுகிறார்.
இதற்காகவே, திருநெல்வேலியில் நடந்த தென் மாவட்டங்களில் உள்ள ஐந்து லோக்சபா தொகுதிகளுக்கு உட்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாட்டில், அமித் ஷா பங்கேற்றார். பின்னர், கட்சி நிர்வாகிகளிடம், அவர் தனியாக பேசியுள்ளார்.
அப்போது, 'தற்போது எனக்கு கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில், பெரிய அளவில் சாதகமான சூழல் இல்லை. பா.ஜ., போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற, கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும். நினைப்பது மாதிரி நடந்தால், வெற்றிக்காக உழைப்பவர்களுக்கு பெரிய பதவிகள் காத்திருக்கின்றன' என, அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.