ADDED : நவ 29, 2026 03:45 AM

நெருப்பு தீர்ப்பு விரைவில்...
திருப்பரங்குன்றத்தில் தீபத்திருநாளில் நிகழ்ந்ததை, திருவண்ணாமலையில் இருந்து பார்த்து, கண் சிவக்க தீர்ப்பு எழுதிக் கொண்டிருக்கும் 'ஜோதி' வடிவான அண்ணாமலையார் முன், நெற்றியில் திருநீறும், கண்களில் கண்ணீருமாய் நிற்கும் சிலரது கேள்விகள்...
1 'முஸ்லிம்களிடம் ஹிந்துக்கள் ஒற்றுமையை கற்றுக்கொள்ள வேண்டும்' என்று உத்தர பிரதேச எம்.எல்.ஏ., ரகுராஜ் பிரதாப் சிங் சமீபத்தில் சொன்னது, திருப்பரங்குன்றம் தீபத்துாண் பார்க்கையில் எல்லாம் என் நினைவிற்கு வர காரணம் நீதானே?
2 'அன்று தீபத்துாணில் தீபம் ஏற்றாத தமிழக அரசை பாராட்டிய அரசியல்வாதிகளை, கையெடுத்து வணங்கும் ஹிந்துக்களின் அந்த மனசுதான் சாமி' என்று, தீபத்துாண் உன்னிடம் நொந்து சொன்னால், 'இல்லை' என்று 'நெற்றிக்கண்' திறப்பாயா ஈசனே?
3 'உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறியது தமிழக அரசு' - இப்படிச் சொன்ன ஊடக அறத்திற்கும், 'துாணில் தீபம் ஏற்றக்கூடாது எனும் நிலைப் பாட்டில் உறுதியாக இருந்த தமிழக அரசு' - இப்படிச் சொன்ன உள்நோக்கத்திற்கும் பரிசுண்டா பரம்பொருளே?
4 'சிலர் கோவிலுக்கு செல்வதும், திருநீறுக்கு நெற்றி காண்பிப்பதும், கையில் வேல் ஏந்துவதும் ஏமாற்று வேலை' என்று இன்னும் நான் சிந்திக்காது திசைதிரும்ப, கள்ளக்குறிச்சி சம்பவம் போல் இன்னும் எத்தனை காத்திருக்கின்றன அப்பனே?
5 'தமிழகமே 'நீட்' தேர்வை எதிர்க்கிறது' என, 'நீட் தேர்வு கூடாது' என கதறும் கட்சி உருட்டு வதற்கும், 'உண்மை பக்தர்களின் உணர்வுகளை மதித்து வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது' எனும் பேட்டிக்கும் என்னப்பா வித்தியாசம்?
6 'உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறிய அரசிடம், 'ஹிந்துக்களின் விருப்பத்தை நிறைவேற்றி கொடுங்கள்' என பிறமதத்தினர் முன் வந்து சொல்லாத நிலையில், 'தமிழகம் மத நல்லிணக்க மண்' என்ற முழக்கம் என்னை மீண்டும் ஏமாற்றப் பார்க்கிறதுதானே?
7 ஹிந்துக்களின் உரிமைக்கு குரல் கொடுக்கும் கட்சியை 'மதவாத கட்சி' என்று அடையாளப்படுத்தி, ஹிந்துக் களையே அதை நம்ப வைத்து, கடுமையாய் எதிர்க்கவும் வைப்பது... கடவுள் மறுப்பாளர்களின் பலமா அல்லது உன் பக்தர்களின் பலவீனமா?
7 ½ த.வெ.க.,வுக்கு மாற்று தி.மு.க.,வா?
