sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

தமிழக மீனவர்கள் அனாதைகளா? ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்

/

தமிழக மீனவர்கள் அனாதைகளா? ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்

தமிழக மீனவர்கள் அனாதைகளா? ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்

தமிழக மீனவர்கள் அனாதைகளா? ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்

3


UPDATED : மார் 20, 2025 03:39 AM

ADDED : மார் 19, 2025 07:40 PM

Google News

UPDATED : மார் 20, 2025 03:39 AM ADDED : மார் 19, 2025 07:40 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தினந்தோறும் கைது செய்யப்படுகின்றனர். மீனவர்களைக் காப்பாற்ற மத்திய அரசு நடவடிகை எடுக்கவில்லை. அவர்கள் என்ன அனாதைகளா?'' என கேட்டு, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசியதால் ராஜ்யசபாவில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ராஜ்யசபாவில் வைகோ பேசியதாவது:


கடந்த 40 ஆண்டுகளில், இலங்கை கடற்படையால், 843 தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரியில், தமிழக மீனவர்கள் 34 பேரை, இலங்கை கடற்படை கைது செய்தது. கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, லட்சக்கணக்கான ரூபாய் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதை அவர்களால் கட்ட முடியவில்லை. இதனால், அவர்களுக்கு மீண்டும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அதன்பிறகு, மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித்த தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த பிப்ரவரி 19ல், மீண்டும் 42 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படை, தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகிறபோது, இந்திய கடற்படை வேடிக்கைப் பார்க்கிறது.

இது தொடர்பாக, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக மீனவர்களும்தான், மத்திய அரசுக்கு வரி கட்டுகின்றனர். ஆனால், அவர்கள் கைவிடப்படுகின்றனர். அப்படியானால், தமிழக மீனவர்கள் என்ன அனாதைகளா?

இந்திய வெளியுறவு மற்றும் நிதி அமைச்சர்கள், இலங்கை பிரதிநிதிகளை சந்தித்து பேசிய பின்பும், மீனவர்கள் கைது நடவடிக்கை ஓயவில்லை.

இது தொடர்பாக, ராமேஸ்வரம்- தங்கச்சி மடத்தில், ஆயிரக்கணக்கான மீனவ பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழக முதல்வர், பிரதமர் மோடியை நேரில் சந்தித்தும், பலமுறை கடிதம் அனுப்பியும்கூட, மீனவர்கள் பிரச்னையில் உரிய நடவடிக்கை இல்லை. கடிதங்கள் குப்பை வீசப்பட்டிருக்க வேண்டும்.

பிரதமர் மோடி விரைவில் இலங்கைக்கு செல்லவிருக்கிறார். மீனவர்கள் கைது நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அவர் அங்கு செல்லக்கூடாது. மாறாக, இலங்கை தலைவர்களை இந்தியாவுக்கு வரச்சொல்ல வேண்டும். தமிழக மீனவர்களை தாக்கி வரும் இலங்கை கடற்படைக்கு எதிராக, ஒரு முறைகூட இந்திய கடற்படை, துப்பாக்கிச் சூடு நடத்தி பதிலடி தரவில்லை. இந்த விஷயத்தில், இலங்கை கடற்படையுடன் இந்திய கடல்படை சேர்ந்து செயல்படுகிறது.

இவ்வாறு, வைகோ, பேசினார்.

இதற்கு விளக்கமளித்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசியதாவது:

மிகுந்த உணர்ச்சிவயப்பட்டு பேசுகிறார் வைகோ. மீன்வர்கள் தாக்கப்படும் பிரச்னை கவலைக்குரியதுதான். அதற்காக, இந்திய கடல்படை, இலங்கை கடல்படையுடன் இணைந்து செயல்படுவதாக கூறுவது தவறு. நம்முடைய நாட்டு மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண 2014ல், பிரதமர் மோடி நேரடியாகவே, இலங்கை அரசுடன் பேசினார். அதன் விளைவாக, அப்போது கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த பிரச்னை குறித்து, இப்பவும் நம்முடைய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை அரசுடன் பேசி வருகிறார். அதனால், வைகோ இந்திய கடல்படை மீது வைத்த குற்றச்சாட்டை திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்.

நேற்று ராஜ்யசபாவில், தி.மு.க., எம்.பி., வில்சன் பேசுகையில், '' மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தமிழகம் உள்பட தென் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும். மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில், தொகுதி வரையறை செய்யப்பட்டால், 8 தொகுதிகளை தமிழகம் இழக்க நேரிடும். எனவே, தொகுதி மறுசீரமைப்பு குறித்து பார்லிமென்ட்டில் பிரதமர் நரேந்திர மோடி, வெளிப்படையாக விளக்கப் பேச வேண்டும்'' என்றார்.

தெருநாய்.. வெறிநாய்..


லோக்சபாவில் ஜீரோ நேரத்தின்போது, ஈரோடு எம்.பி., பிரகாஷ் பேசுகையில், '' ஈரோடு லோக்சபா தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தெரு நாய் மற்றும் நோய்வாய்ப்பட்ட வெறி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நாய்களின் கடியால், ஆடு, மாடு, கோழிகள் இறக்க நேரிடுகிறது. இதனால் நாய்களால் தாக்குதலுக்கு உள்ளான பிராணிகளை கணக்கெடுத்து, அதற்குரிய இழப்பீட்டை தர வேண்டும். வெறிநாய்களை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.



-நமது டில்லி நிருபர்-






      Dinamalar
      Follow us