அசாருதீனுக்கு அமைச்சர் பதவி; காங்கிரஸ் முடிவுக்கு பலன் கிடைக்குமா?
அசாருதீனுக்கு அமைச்சர் பதவி; காங்கிரஸ் முடிவுக்கு பலன் கிடைக்குமா?
ADDED : நவ 02, 2025 08:23 AM

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், தெலுங்கானா அமைச்சராக சமீபத் தில் பதவியேற்றார். திடீரென அவர் அமைச்சராக காரணம் என்ன? 'எல்லாம் முஸ்லிம் ஓட்டு வங்கி தான்' என்கின்றனர் காங்கிரசார்.
வரும் 11ல், தெலுங்கானாவின் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. 2023 சட்டசபை தேர்தலில், இத்தொகுதி யில் காங்., வேட்பாளரான அசாரு தீன், பாரத் ராஷ்ட்ர சமிதி வேட்பாளர் கோபிநாத்திடம் தோல்வி அடைந்தார். சில மாதங்களுக்கு முன், கோபிநாத் இறந்து விட்டதால் இடைத்தேர்தல் நடக்கிறது.
'நான்கு லட்சம் வாக்காளர்கள் உள்ள இந்த தொகுதியில், 1.3 லட்சம் பேர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எப்படியாவது இத்தொகுதியில் காங்., வெற்றி பெற வேண் டும் என்பதால், அசாருதீனை முதல்வர் ரேவந்த் ரெட்டி அமைச்சராக்கியுள்ளார்' என்கின்றனர் கட்சியினர்.
இது மட்டுமல்லாது, பீஹார் தேர்தல் பிரசாரத்திலும் அசாருதீனை இறக்கி விட காங்., முடிவெடுத்துள்ளதாம். இங் குள்ள முஸ்லிம் ஓட்டு வங்கி, காங்., கூட்டணிக்கு முழுதாக கிடைக்கவே இந்த ஏற்பாடாம்

