தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/கட்டுக் கட்டாக போனஸ்; கண் கலங்கிய ஊழியர்கள்

கட்டுக் கட்டாக போனஸ்; கண் கலங்கிய ஊழியர்கள்

கட்டுக் கட்டாக போனஸ்; கண் கலங்கிய ஊழியர்கள்


ADDED : நவ 09, 2026 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 09, 2026 04:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சின்னச் சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு!


மும்பையைச் சேர்ந்த த்ரிஷ்டி, வீடு திரும்பியபோது, தன் வீட்டு முன் போட்டிருந்த ரங்கோலி கோலம் சற்று மாறியிருப்பதைக் கண்டார். 'சிசிடிவி' பதிவைப் பார்த்தபோது, பிளிப்கார்ட் டெலிவரி ஊழியர் ஒருவர் தவறுதலாக அதை மிதித்துவிட்டதும், அதை அப்படியே விட்டுச் செல்லாமல் அவரே அருகில் அமர்ந்து கவனமாகச் சரி செய்ததும் தெரிந்தது.

யாரும் கேட்காமலேயே சரிசெய்த அந்த ஊழியருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார் த்ரிஷ்டி. பொறுப்புடன் நடந்துகொண்ட ஊழியரை இணையவாசிகளும் பாராட்டினர். 'சிறு கருணைச் செயல்கள் மனிதர்கள் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும்' என்றும், பலர் கமென்ட் செய்துள்ளனர்.

Image 1642604

கட்டுக் கட்டாக போனஸ்; கண் கலங்கிய ஊழியர்கள்


குஜராத்தின் சூரத்தில் ஜவுளி நிறுவனம் நடத்தும் ராம்ஸ்வரூப் முண்டே, தன் 20 ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸாக தலா, 1 லட்சம் ரூபாய்க்கும் மேல் ரொக்கம் வழங்கிய வீடியோ வலைதளங்களில் பரவுகிறது. இனிப்பு, உலர் பழப் பெட்டிகளுக்குப் பதிலாக, புதிய ரூபாய் நோட்டுக் கட்டுகளை, ஊழியர்களுக்கு அவரது மனைவி வழங்குகிறார்.

பெற்றுக்கொண்ட ஊழியர்கள் சிலர் கண்ணீர் மல்கினர். 'ஊழியர்கள் என் குடும்பத்தின் ஒரு பகுதி. அவர்கள் எந்த கவலையும் இன்றி தீபாவளியைக் கொண்டாட வேண்டும்' என்கிறார், முண்டே. 'இவரது நிறுவனத்தில் வேலைக்கு சேருவது எப்படி' என்று கமென்ட் செய்துள்ளனர், வலைதள பிரியர்கள் சிலர்.

ஆசிரியரை கண்டதும் நெகிழ்ச்சி; ஆனந்தக்கண்ணீரில் மாணவர்


'பாம்பே ஷேவிங் கம்பெனி' நிறுவனர் சாந்தனு தேஷ்பாண்டே, 21 ஆண்டுக்குப் பின் தன் முன்னாள் கணித ஆசிரியரை சந்தித்த வீடியோ, வலைதளங்களில் பரவி வருகிறது. தன்னை நேரில் கண்டதும், கண் கலங்கி பேச முடியாமல் நிற்கும் சாந்தனுவை கட்டி அணைத்துக் கொள்கிறார், ஆசிரியர் ஜே.ஜே. அகர்வால்.

Image 1642605

'கடந்த, 2005-ல் ஐ.ஐ.டி., தேர்வு முடிவுக்குப் பிறகு, தேறமுடியாத துயரத்தில் முதலில் அழைத்தது கோட்டாவிலிருந்த இந்த ஆசிரியரே. அவரது ஆறுதல் மொழிகள், 20 ஆண்டுகளாக என்னுடன் இருந்தன' என்கிறார், சாந்தனு.

'அதே குரலைக் கேட்டதும், மீண்டும் 18 வயதானேன். சரியான நேரத்தில் ஒரு நல்ல ஆசிரியர் ஏற்படுத்தும் தாக்கம் அளப்பரியது என்ற அவரது பதிவு, வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

நட்சத்திரக் கடலாக மின்னியது சென்னை


ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் இருந்து கீழே தெரிந்த சென்னை நகரம், நட்சத்திரங்கள் நிறைந்த வானம் போல காட்சியளிக்கிறது. தீபாவளி நாளன்று வீடுகளும் தெருக்களும் ஒளிர்ந்த இந்த அற்புதக் காட்சியை, விமானி பிரதீப் கிருஷ்ணன் படம்பிடித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Image 1642606

75 லட்சம் பேர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர். 'ப்ரோ, நான் போட்ட வெடி மேல வந்துச்சா, பார்த்து சொல்லுங்க', 'கீழே பார்த்துட்டு வண்டிய எங்காவது விட்டுறாதீங்க' என்பது போன்ற, ஜாலி கமென்ட்கள் குவிந்து வருகின்றன.

ஓட்டத்தில் ஒரு ஆட்டம்; சாதனை படைத்த ஷோலே


பிரிட்டனைச் சேர்ந்த ஜார்ஜ் ஷோலே, ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டே நான்கு புதிர் 'கியூப்'களைத் தீர்த்து, கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கனடாவின் டொராண்டோவிலுள்ள சென்ட்ரல் டெக் உயர்நிலைப் பள்ளியில், காற்று வீசிய சூழலிலும், 5 நிமிடம் 9.25 விநாடிகளில் இதை முடித்தார். ஒவ்வொரு, 400 மீட்டர் சுற்றுக்கு முன்பும் ஒரு 'கியூப்' புதிருக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு நான்கு முறை செய்தார்.

Image 1642607

பிரிட்டன் நார்தாம்ப்டன்ஷயரைச் சேர்ந்த இவர், ஸ்கேட் போர்டிங்கின்போது, 500 கியூப்களையும், 24 மணி நேரத்தில் 6,931 கியூப்களையும் தீர்த்தும், லண்டன் மாரத்தானில் 520 கியூப்களைத் தீர்த்தும் முன்பு சாதனை படைத்தவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us