தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/லஞ்சம்: தடையில்லா சான்று ‛விலை' ரூ.60 ஆயிரம்!

லஞ்சம்: தடையில்லா சான்று ‛விலை' ரூ.60 ஆயிரம்!

லஞ்சம்: தடையில்லா சான்று ‛விலை' ரூ.60 ஆயிரம்!


ADDED : ஜன 19, 2026 02:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2026 02:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லஞ்சப் பேர்வழிகளை அம்பலப்படுத்த, 'லஞ்சம் - என்னிடம் பறித்தனர் பகுதி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. இப்பகுதி திங்கள்தோறும் 'தினமலர்' இதழில் வெளியாகும். வாசகரின் இந்த வார உள்ளக்குமுறல் இதோ:

பெயர் வெளியிட விரும்பாத வாசகர்:


நீலகிரி மாவட்டம், கூடலுார், பந்தலுார் பகுதியில் மின் இணைப்பு பெற வருவாய் துறையின் தடையில்லா சான்று அவசியம். காரணம், அந்த இரு பகுதிகளில் 'அரசால் தீர்வு காணப்படாத நிலம்' என, வகைப்படுத்தப்பட்ட, 'செக்சன்-17 பிரிவுக்கு' உட்பட நிலங்களில் உள்ள வீடுகளுக்கு, கோர்ட் உத்தரவுப்படி, மின் இணைப்பு பெற தடையில்லா சான்று வழங்கப்படுவதில்லை. ஆனால், வருவாய் துறைக்கு சொந்தமான பிற நிலங்களில் உள்ள வீடுகளுக்கு, நிபந்தனைகள் அடிப்படையில் மின் இணைப்பு பெற தடையில்லா சான்று வழங்கப்படுகிறது.

அதில், சில வருவாய் அதிகாரிகள் நேரடியாக இல்லாமல், புரோக்கர் மூலம் பணம் பெற்று, மின் இணைப்புக்கான தடையில்லா சான்று வழங்குகின்றனர். பணம் கொடுக்க முடியாதவர்களுக்கு சான்றிதழ் கிடைப்பதில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், ஒரே பகுதியில் அருகருகே உள்ள இரு வீடுகளின் உரிமையாளர்கள், மின் இணைப்பு பெற, வருவாய் துறைக்கு தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பித்தனர்.

அதிகாரிகள் விசாரணை செய்து சென்றனர். அதில், ஒருவர் பணம் கொடுத்து தடையில்லா சான்று பெற்று மின் இணைப்பும் பெற்றுள்ளார். பணம் கொடுக்க வசதி இல்லாதவர், இருட்டு வீட்டில்தான் வசித்து வருகிறார். தடையில்லா சான்றுக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை பேரம் பேசி கறக்கின்றனர்.

தொடரும்...

Image 1523503


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us