தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ஜெகன்மோகன் ரெட்டி உறவினர் திருமண விழாவில் தொழிலதிபர் அதானியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு

ஜெகன்மோகன் ரெட்டி உறவினர் திருமண விழாவில் தொழிலதிபர் அதானியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு

ஜெகன்மோகன் ரெட்டி உறவினர் திருமண விழாவில் தொழிலதிபர் அதானியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு

20


UPDATED : நவ 07, 2026 10:40 AM

ADDED : நவ 07, 2026 05:38 AM

Follow on GoogleFavourite on Google

20

UPDATED : நவ 07, 2026 10:40 AM ADDED : நவ 07, 2026 05:38 AM


20
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

சென்னையில் நேற்று முன்தினம் நடந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உறவினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், அரசியல், தொழில், சினிமா ஆகிய மூன்று துறைகளின் பிரபலங்கள் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினர்.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரான மறைந்த ராஜசேகர் ரெட்டியின் சகோதரர் ஜார்ஜ் ரெட்டி.

பிரபலங்கள்


இவரது மகன் அனில் ரெட்டி. இவரது மகள் ஸ்ரேயா - உஜ்வல் பெலானி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம், சென்னை எம்.ஆர்.சி., நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. முதல்வர் விஜய், ஜெகன்மோகன் ரெட்டி, தொழிலதிபர் கவுதம் அதானி ஆகியோர் பங்கேற்றனர். மூவரும் முன்வரிசையில் ஒன்றாக அமர்ந்து கலந்துரையாடினர்.

மேலும், தெலுங்கானா மாநிலத்தின் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி செயல் தலைவர் கே.டி.ராமராவ், முதல்வர் விஜயின் தாய் ஷோபா, நடிகை திரிஷா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அதேபோல ஜெகன்மோகன் ரெட்டி, அவரது தாயார் விஜயம்மா உள்ளிட்ட அம்மாநில பிரபலங்களும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதித்தனர். முக்கிய தொழிலதிபர்களும் பங்கேற்றனர்.

பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி பங்கேற்றதால், மற்ற தொழிலதிபர்கள் கவனத்தை அத்திருமணம் ஈர்த்தது. மேலும், முதல்வர் விஜய் மற்றும் ஜெகன்மோகன்ரெட்டியை வரவேற்று பிரமாண்ட கட்அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

நல்லுறவு


இதுகுறித்து த,வெ.க., நிர்வாகிகள் கூறியதாவது: முதல்வர் விஜய், தமிழக அரசியலில் மட்டுமின்றி தேசிய அளவிலான அரசியல் மற்றும் தொழிலதிபர்களுடன் நல்லுறவு வளர்த்து வருகிறார். துறைமுகம், மின்சாரம், எரிசக்தி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதானி குழுமம் செயல்பட்டு வருகிறது.

அதானி, முதல்வர் விஜய் சந்திப்பால், தமிழகத்திலும் தொழில் முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்கள் இனி வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

அரசியல், சினிமா, தொழில் துறை போன்ற முக்கிய பிரமுகர்கள் சங்கமித்த திருமண விழாவாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us