தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/தவெக எம்எல்ஏ.,க்கள் - மாவட்ட செயலர்கள் மோதல் அதிகரிப்பு

தவெக எம்எல்ஏ.,க்கள் - மாவட்ட செயலர்கள் மோதல் அதிகரிப்பு

தவெக எம்எல்ஏ.,க்கள் - மாவட்ட செயலர்கள் மோதல் அதிகரிப்பு

9


UPDATED : ஜூன் 23, 2026 01:39 PM

ADDED : ஜூன் 23, 2026 06:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 23, 2026 01:39 PM ADDED : ஜூன் 23, 2026 06:10 AM

9


9
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

தமிழக வெற்றிக் கழகத்திற்குள் புகைந்து கொண்டிருந்த உட்கட்சி பிரச்னைகள் தற்போது ஒவ்வொன்றாக வெடித்து சிதற தொடங்கி உள்ளன.

மாற்றுக் கட்சியில் இருந்து வந்த 106 பேருக்கு, சட்டசபை தேர்தலில் போட்டியிட 'சீட்' வழங்கினார் த.வெ.க., தலைவர் விஜய். இதனால், மாவட்ட செயலர்கள் 62 பேர் உட்பட, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு 'சீட்' கிடைக்கவில்லை.

பூதாகரம்


அப்போதே கட்சிக்குள் அதிருப்தி உருவானது. தேர்தல் முடிவில், மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்த 49 பேர் வெற்றி பெற்றனர்; அவர்களில் ஏழு பேர் அமைச்சராகினர். இந்நிலையில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மா.செ.,க்களுக்கு இடையே உட்கட்சி பிரச்னைகள் பூதாகரமாகி வருவதாக த.வெ.க., வட்டாரங்கள் கூறுகின்றன.



அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: திருவெறும்பூர் தொகுதியை உள்ளடக்கிய, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலர் அருள்ராஜு-க்கு சீட் தராமல், தி.மு.க.,வில் இருந்து வந்த விஜிக்கு சீட் தரப்பட்டது.

விஜி வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனதோடு, மா.செ., பதவிக்கு முயன்று வருவதால், பிரச்னை வெடித்தது. அருள்ராஜின் ஆதரவாளர் சபரி என்பவரை, கெட்ட வார்த்தை சொல்லி விஜி வறுத்தெடுக்கும் ஆடியோ வெளியானது.

அதேபோல், வேட்பாளர் அறிவிப்புக்கு முன்தினம் கட்சியில் இணைந்து, சிவகாசியில் போட்டியிட்ட கீர்த்தனா, அமைச்சராகி விட்டார். அவரால், விருதுநகர் வடமேற்கு மா.செ., மாரிசெல்வத்துக்கும் சீட் கிடைக்கவில்லை.

ஆரம்பத்தில் இருந்தே இருவருக்கும் ஆகவில்லை. சிவகாசியில் அமைச்சர் பங்கேற்கும் எந்த நிகழ்ச்சிக்கும், மாரிசெல்வத்துக்கு அழைப்பு தருவதில்லை.

சிவகாசியில் நடந்த முதல்வர் விஜய் பிறந்த நாள் விழாவில், இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அமைச்சரின் ஆதரவாளர்கள் வைத்திருந்த பேனரும் கிழிக்கப்பட்டது.

பனிப்போர்


தென்சென்னை வடக்கு மா.செ., அப்புனுவின் தி.நகர் தொகுதியில் பொதுச்செயலர் ஆனந்தும், ஆயிரம் விளக்கில் பிரபாகரும் போட்டியிட்டதால், அவருக்கு சீட் கிடைக்கவில்லை. தற்போது இருவரும் 'பவர்புல்' ஆகி விட்டதால், அப்புனுவை யாருமே மதிப்பதில்லை. விரக்தியில் உள்ள அப்புனு முடங்கி விட்டார்.

அதேபோல், தென்சென்னை தெற்கு மா.செ., தாமு விரும்பிய வேளச்சேரியை குமாரும், மயிலாப்பூரை வெங்கட்ரமணனும் வாங்கினர். தொகுதி இல்லாமல் ராயபுரத்தில் நின்று எம்.எல்.ஏ., ஆனார் தாமு.

குமாரும், வெங்கட்ரமணனும் அமைச்சர் ஆகி ஆதிக்கம் செலுத்துவதால், மாவட்டத்தில் எதுவும் செய்ய முடியாமல் பொருமி வருகிறார் தாமு. அமைச்சர்களின் ஆதரவாளர்கள் அதிகரித்து வருவதால், இரு தரப்புக்கும் இடையே 'போஸ்டர்' மோதல் வெடித்து உள்ளது.

இதனிடையே, தாமுவின் ராயபுரம் வருகையால், சீட்டை இழந்த வடசென்னை தெற்கு மா.செ., 'கட்பீஸ்' விஜயராகவன், ராயபுரத்தில் தாமு ஆதிக்கம் செலுத்துவதை ரசிக்கவில்லை. இருவருக்கும் பனிப்போர் மூண்டுள்ளது.

வி.எஸ்.பாபுவால் கொளத்துார் தொகுதியை இழந்த, சென்னை வடமேற்கு மா.செ., தணிகாசலம், எந்த நிகழ்ச்சிக்கும், எம்.எல்.ஏ.,வை அழைப்பதில்லை. பாபுவும் தணிகாவை அழைப்பது இல்லை.

இதேபோல், காஞ்சிபுரம், வேலுார், திருச்சி, கோவை, நாமக்கல், துாத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் உட்பட தமிழகம் முழுதும் உட்கட்சி பிரச்னை கொழுந்து விட்டு எரிகிறது. மாற்றுக் கட்சியினரின் வருகை, அதை தீவிரப்படுத்தியுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us