ADDED : ஆக 11, 2024 12:58 AM

புதுடில்லி: தற்போது, ராஜ்யசபாவில் 12 எம்.பி., பதவிகள் காலியாக உள்ளன. இதற்கு அடுத்த மாதம் 3ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஏழு இடங்கள் பா.ஜ.,விற்கு கிடைக்கும்; இதனுடைய வேட்பாளர்களை பா.ஜ.,வின் பார்லிமென்ட் குழு கூடி தேர்ந்தெடுக்கும்.
'ராஜ்யசபாவில் சோனியா இருப்பதால், அவருக்கு எதிராக ஒரு அதிரடி பெண்மணியைக் கொண்டு வந்து, சரியான போட்டியைக் கொடுக்க வேண்டும்' என, பா.ஜ., ஆலோசனை செய்து வருகிறதாம். இதனால், அமேதியில் தோற்ற, ஸ்மிருதி இரானியை ராஜ்யசபா எம்.பி.,யாக்க பா.ஜ., யோசனை செய்து வருகிறதாம். அவர் எம்.பி.,யானால் ராஜ்யசபாவில் அடிக்கடி மோதல்கள் வரும்.
'பல துறைகளில் சிறப்புடன் செயல்படும், 12 பேரை ஜனாதிபதி ராஜ்யசபா எம்.பி.,க்களாக நியமிக்கலாம். இதில், தற்போது நான்கு எம்.பி., பதவிகள் காலியாக உள்ளன. இந்த நான்கில் ஒன்று அல்லது இரண்டு இடங்கள் தமிழர்களுக்கு கிடைக்கும்' என, பேச்சு அடிபடுகிறது.
'தமிழகத்தில், பொருளாதாரம் குறித்து எழுதும் பிரபலம் ஒருவருக்கு நிச்சயம் நியமன எம்.பி., பதவி உண்டு' என, பா.ஜ., வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.