ADDED : செப் 29, 2024 02:27 AM

அமராவதி: 'திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யில் கலப்படம். இதற்கு காரணம், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி' என, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினார். அத்துடன், இதை விசாரிக்க ஒரு கமிட்டியும் நியமித்து உள்ளார். இன்னொரு பக்கம், துணை முதல்வர் பவன் கல்யாண், 11 நாட்கள் விரதத்தை துவக்கி உள்ளார்
இந்த விவகாரம், அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், உலகம் முழுக்க உள்ள ஏழுமலையான் பக்தர்களை நோகடித்து உள்ளது.
'முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ஒரு ஹிந்து விரோதி என, காட்டுவதற்காக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு உள்ளார்' என, அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அத்துடன், 'பா.ஜ.,வின் ஹிந்து ஓட்டுகளை ஆந்திராவில் தன் பக்கம் இழுக்கவும், இந்த விஷயம் நாயுடுவிற்கு உதவும். கூட்டணிக் கட்சியான பா.ஜ.,விற்கு, 'செக்' வைக்க, இது தான் சமயம் என்பதையும் நாயுடு புரிந்துகொண்டுள்ளார்' என்கின்றனர்.
மத்தியில் பா.ஜ.,விற்கு நிபந்தனையற்ற ஆதரவை, நாயுடு அளித்து வந்தாலும், மாநிலத்தில் பா.ஜ.,வை அதிகமாக வளரவிடக் கூடாது என்பதில் குறியாக உள்ளாராம்.