ADDED : டிச 22, 2024 01:37 AM

மும்பை: மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர் என, பல பதவிகளை வகித்தவர் சரத் பவார். 'மஹாராஷ்டிராவின் வலுவான தலைவர்' என, அழைக்கப்படுபவர்.
ஆனால், இவருடைய கட்சியை இரண்டாக உடைத்து, பா.ஜ., கூட்டணியில் சேர்ந்து விட்டார், இவருடைய சகோதரர் மகன் அஜித் பவார். நடந்து முடிந்த மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் படு தோல்வியைத் தழுவினார் சரத் பவார்.
சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே. இவர் மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவராக இருந்தாலும், தமிழக அரசியலை நன்கு தெரிந்து வைத்துள்ளார். அத்துடன், 'தி.மு.க., குடும்ப அரசியலில் என்ன நடக்கிறது, குடும்பத்திற்குள் உள்ள பிரச்னைகள்... கட்சிக்குள் உள்ள கருத்து வேறுபாடுகள்' என, அனைத்து விஷயங்களையும் அறிந்துள்ளாராம். பல டில்லி பத்திரிகையாளர்கள் சுப்ரியாவை சந்தித்து, தமிழக அரசியலின் உள்குத்து விபரங்களைப் பெற்றுக் கொள்கின்றனராம்.
பா.ஜ.,விற்கும் இப்படிப்பட்ட சில தி.மு.க., குடும்ப விபரங்கள் சுப்ரியா வாயிலாக தெரியவந்துள்ளதாம். 'நம் கட்சி விவகாரங்கள் எப்படி சுப்ரியாவிற்கு தெரிய வருகிறது' என சில தி.மு.க., - எம்.பி.,க்கள் நொந்து போயுள்ளனராம்.