UPDATED : ஏப் 13, 2025 05:58 PM
ADDED : ஏப் 13, 2025 04:00 AM

பாட்னா: இந்த ஆண்டு இறுதியில் பீஹார் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இப்போதே தேர்தல் பிரசாரங்கள் துவங்கி விட்டன. மஹாராஷ்டிரா, ஹரியானா, டில்லி மாநில தேர்தல்களில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் உள்ள பா.ஜ., பீஹாரில் தீவிரமாக களம் இறங்கியுள்ளது.
பீஹார் அரசியலில் எப்போதுமே ஜாதி அடிப்படையில்தான் ஓட்டுகள் விழும்.
இந்நிலையில், 'விகாஷீல் இன்சான்' என புதிதாக ஒரு கட்சி துவங்கப்பட்டுள்ளது. நிஷாத் இன மக்களின் ஓட்டுகள் இந்த கட்சிக்குதான் விழும் என கூறப்படுகிறது.
இதையடுத்து பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் களத்தில் உள்ளது.
ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலுவோ, தன் மகன் தேஜஸ்வி யாதவ் முதல்வராக வேண்டும் என ஆசைப்படுகிறார். தொடர் தோல்வியை சந்தித்த காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க கூடாது என, லாலு சொல்லி வருகிறார்.
சமீபத்தில் பீஹார் சென்ற ராகுல், அங்கு பாதயாத்திரை மேற்கொண்டார். இதற்கு கூட்டம் அதிகம் சேரவில்லை. ஆனால், சமூக வலைதளங்களில் இதற்காக பரபரப்பு உண்டாக்கப்பட்டது. ராகுலின் பாதயாத்திரை விவகாரத்தில் லாலுவும், அவரது கட்சியினரும் ஒதுங்கிஇருந்தனர். நவம்பரில் நடக்கவுள்ள பீஹார் சட்டசபை தேர்தல் தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

