sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

தேவசம் போர்டு - போலீஸ் பனிப்போர்: சபரிமலையில் தவிக்கும் பக்தர்கள்

/

தேவசம் போர்டு - போலீஸ் பனிப்போர்: சபரிமலையில் தவிக்கும் பக்தர்கள்

தேவசம் போர்டு - போலீஸ் பனிப்போர்: சபரிமலையில் தவிக்கும் பக்தர்கள்

தேவசம் போர்டு - போலீஸ் பனிப்போர்: சபரிமலையில் தவிக்கும் பக்தர்கள்

5


UPDATED : ஜன 04, 2024 05:56 AM

ADDED : ஜன 04, 2024 01:38 AM

Google News

UPDATED : ஜன 04, 2024 05:56 AM ADDED : ஜன 04, 2024 01:38 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலை: திருவிதாங்கூர் தேவசம் போர்டு மற்றும் போலீஸ் இடையே நடக்கும் பனிப்போரால், சபரி மலையில் பக்தர்களின் பரிதவிப்பு தொடர்கிறது.

கேரள மாநிலம் சபரிமலையில், 'விர்ச்சுவல் கியூ' என்ற திட்டத்தை முதலில் அமல்படுத்திய கேரள போலீசார், இதன் வாயிலாக நல்ல வருமானத்தையும் பெற்று வந்தனர்.

அந்த இணையதளத்தில் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கான கட்டணங்கள் போலீஸ் துறைக்கு கிடைத்து வந்தது. கேரள உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஆண்டு இந்த திட்டம் தேவசம் போர்டிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன் பின்னர் தேவசம் போர்டுக்கும், போலீசுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இவற்றை தேவசம் போர்டு மறுத்து வருகிறது.

'ஆன்லைன் கியூ சிஸ்டம்' வருவதற்கு முன்பே, தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த போதும், சில மணி நேரம் மட்டுமே நெரிசல் இருக்கும். அதற்கு பின் சீராகிவிடும்.

கடந்த ஆண்டு வரை போலீசிடம் விர்ச்சுவல் கியூ திட்டம் இருந்தபோது போலீசார் தீவிரமாக பணியாற்றி, அதிக எண்ணிக்கையில் பக்தர்களை 18 படியேற்றி நெரிசலை தவிர்த்தனர்.

ஆனால் இந்த ஆண்டு நிமிடத்திற்கு 60 பேரை மட்டுமே ஏற்றுவோம் என போலீசார் செயல்பட்டு வருகின்றனர். அதை கேரள ஏ.டி.ஜி.பி., அஜித், சபரிமலை தொடர்பான பல ஆய்வுக் கூட்டங்களிலும் வலியுறுத்தி வந்துள்ளார்.

இதற்கு அவர் பல தொழில்நுட்ப காரணங்களையும் கூறியுள்ளார். தேவசம்போர்டு, ஒரு நிமிடத்திற்கு 90 பேரையாவது ஏற்ற வேண்டும் என்று கெஞ்சுகிறது. ஆனால், அதற்கு போலீசார் செவி சாய்ப்பதாக தெரியவில்லை.

தொடரும் பனிப்போர்


சபரிமலையில் மண்டல காலத்தை போல மகர விளக்கு காலத்திலும் பக்தர்களின் நீண்ட கியூ, மர கூட்டம் வரை காணப்படுகிறது. 12 மணி நேரம் வரை காத்திருப்பதால் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

சபரிமலை வரும் பாதைகளில் வாகனங்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்படும் சம்பவங்கள் தினமும் அரங்கேறி வருகின்றன.

தேவசம் போர்டுக்கும், போலீசாருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுதான் இவ்வளவு பிரச்னைக்கும் காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜன., 15 மகரஜோதி நாளில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கக் கூடாது என்பதற்காக, 10 -15 வரை ஸ்பாட் புக்கிங் வசதியை தேவசம்போர்டு நிறுத்தி உள்ளது.

ஜோதி நாளில் பக்தர்கள் எண்ணிக்கையை 20,000 ஆக குறைக்கும்படி போலீசார் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us