தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/'என் பிரசாரத்தால் அதிருப்தி சரியாகும்': த.வெ.க.,வினருக்கு விஜய் நம்பிக்கை

'என் பிரசாரத்தால் அதிருப்தி சரியாகும்': த.வெ.க.,வினருக்கு விஜய் நம்பிக்கை

'என் பிரசாரத்தால் அதிருப்தி சரியாகும்': த.வெ.க.,வினருக்கு விஜய் நம்பிக்கை

20


UPDATED : செப் 23, 2026 05:51 AM

ADDED : செப் 23, 2026 05:49 AM

Follow on GoogleFavourite on Google

20

UPDATED : செப் 23, 2026 05:51 AM ADDED : செப் 23, 2026 05:49 AM


20
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: இடைத்தேர்தல் கள நிலவரம், ஆளும் கட்சிக்கு எளிதாக இல்லையென, கூறப்படும் நிலையில், 'நான் பிரசாரத்துக்கு சென்றால், எல்லாம் சரியாகி விடும்' என, த.வெ.க.,வினரிடம் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் வென்ற, மரகதம், சத்யபாமா ஆகியோர், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க.,வில் இணைந்தனர். தற்போது, அவர்கள் ராஜினாமா செய்த தொகுதிகளிலேயே, த.வெ.க., வேட்பாளர்களாக இடைத்தேர்தலில் களம் இறங்கி உள்ளனர். மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில், அவர்கள் செல்லும் இடங்களில் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

த.வெ.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: அ.தி.மு.க.,வில் இருந்து வந்த இருவருக்கும், போட்டியிட வாய்ப்பளித்தது, மக்களுக்கு பிடிக்கவில்லை. த.வெ.க., நிர்வாகிகள் மத்தியிலும் அதிருப்தி உள்ளது. இதனால், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில், த.வெ.க.,வுக்கு சாதகமான சூழல் இல்லை. இது குறித்து, த.வெ.க., பொதுச்செயலரான, அமைச்சர் ஆனந்திடம் கூறினோம்.

அவர், முதல்வர் விஜய் கவனத்துக்கு கொண்டு சென்றார். உளவுத்துறை அறிக்கையும், த.வெ.க.,வுக்கு எதிராக உள்ளது. இந்நிலையில், முதல்வரின் முகாம் அலுவலகத்தில், ஓரிரு நாட்களுக்கு முன், ஆலோசனைக் கூட்டம் நடந்திருக்கிறது.

அதில், 'அதிருப்தி எல்லாம், நான் பிரசாரம் செய்யும் வரை தான். இரு தொகுதிகளிலும் நான் பிரசாரம் செய்தால், எல்லா அதிருப்தியும் சரியாகிவிடும்' என முதல்வர் விஜய் சொல்லி இருக்கிறார்.

அவரது வியூக வகுப்பாளர் ஜான்ஆரோக்கியசாமியும், 'விஜய் முகத்துக்குத்தான் ஓட்டு. வேட்பாளர்கள் எல்லாம் கணக்கே இல்லை. போய் வேலையை பாருங்க' என அசால்டாக பேசியுள்ளார். கள நிலவரத்தை, த.வெ.க., மேலிடம், சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லையோ என்ற சந்தேகம், நிர்வாகிகளிடம் நிலவுகிறது. இவ்வாறு கூறினர்.

 தாராபுரத்தில் செப்., 30ல் பிரசாரம்


தாராபுரத்தில், த.வெ.க., சார்பில், இடைத்தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், வரும் 30ம் தேதி நடக்கிறது. உடுமலை ரோடு மாருதி நகரில் நடக்கும் இந்த கூட்டத்தில், த.வெ.க., தலைவரான, முதல்வர் விஜய் பங்கேற்று பேசுகிறார்.
பொதுக்கூட்டத்துக்காக, 54 ஏக்கர் இடத்தை சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது. கூட்ட ஏற்பாடுகளை, அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். அக்., 4ல், வாகனம் வாயிலாக, த.வெ.க., வேட்பாளர் சத்யபாமாவுக்கு ஆதரவாக விஜய் ஓட்டு சேகரிக்க உள்ளதாகவும் கட்சியினர் கூறினர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us