தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/தி.மு.க., ஆட்சியில் நியமிக்கப்பட்ட வாரிய தலைவர்கள் விலக உத்தரவு

தி.மு.க., ஆட்சியில் நியமிக்கப்பட்ட வாரிய தலைவர்கள் விலக உத்தரவு

தி.மு.க., ஆட்சியில் நியமிக்கப்பட்ட வாரிய தலைவர்கள் விலக உத்தரவு

7


UPDATED : ஜூலை 07, 2026 05:26 AM

ADDED : ஜூலை 07, 2026 05:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 07, 2026 05:26 AM ADDED : ஜூலை 07, 2026 05:17 AM

7


7
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற த.வெ.க., தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், காங்கிரஸ், வி.சி.க., முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர, மற்ற கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளன.

த.வெ.க., சார்பில் போட்டியிட்டு, தோல்வி அடைந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனுக்கு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, த.வெ.க.,வில் அமைச்சர் பதவி கிடைக்காதவர்கள், அ.தி.மு.க., உள்ளிட்ட மாற்று கட்சிகளில் இருந்து த.வெ.க.,வில் இணைந்தவர்கள், கூட்டணி கட்சியினருக்கு வாரிய, ஆணைய தலைவர் பதவிகள் வழங்க, முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளார்.

அதற்கு வசதியாக, கடந்த தி.மு.க., ஆட்சியில் நியமிக்கப்பட்ட வாரிய, ஆணைய தலைவர்களை ராஜினாமா செய்ய த.வெ.க., அரசு உத்தரவிட்டுள்ளது.

அதை ஏற்று, தமிழ்நாடு தீயணைப்பு ஆணைய தலைவர் சங்கர் ஜிவால், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவர் சுனில் குமார், தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணைய தலைவர் மணிவண்ணன், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் பலர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர்.

அதேபோல, தி.மு.க., அமைச்சர்களிடம் உதவியாளர்களாக இருந்த அரசு ஊழியர்கள் பலர் இப்போது த.வெ.க., அமைச்சர்களின் உதவியாளர்களாக உள்ளனர்.

அவர்களை அப்பணியில் இருந்து விடுவித்து, வேறு பணி வழங்கவும் த.வெ.க., அரசு அறிவுறுத்தி உள்ளது. தி.மு.க., அமைச்சர்களின் உதவியாளராக இருந்தவர்கள் இப்போதும் இருந்தால், அரசின் தகவல்கள் அனைத்தும் தி.மு.க.,வுக்கு சென்று விடும். எனவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக த.வெ.க.,வினர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us