ADDED : ஜூலை 21, 2025 04:18 AM

சென்னை, அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில், தமிழ், ஆங்கிலத்துடன், ஹிந்தியிலும் பெயர் பலகை வைக்கப்பட்டது.
பின், கடும் எதிர்ப்பால், அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில், இருந்த ஹிந்தி எழுத்துகள் காகிதம் ஒட்டி மறைக்கப்பட்டுள்ளன.
மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரம், தமிழக அரசிடம் தான் உள்ளது. எனவே, ஹிந்தி எழுத்துகள் இடம் பெற்றது குறித்து, தி.மு.க., அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
மத்திய அரசு நிறுவனங்கள், ஹிந்தியை திணித்தால், அதற்கு எதிராக ஆவேசமாக முழங்கும் முதல்வர் ஸ்டாலின், அவரது அரசின் ஹிந்தி திணிப்பை கண்டும் காணாமலும் அமைதியாக இருக்கிறார்.
சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் மும்மொழிக் கொள்கையை கடைப்பிடிப்பது ஏன்?
முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்; ஹிந்தியில் பெயர் பலகை வைப்பதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அன்புமணி, தலைவர், பா.ம.க.,