தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ஆளுங்கட்சியில் ஐக்கியமாக தயாராகும் தி.மு.க., நிர்வாகிகள்

ஆளுங்கட்சியில் ஐக்கியமாக தயாராகும் தி.மு.க., நிர்வாகிகள்

ஆளுங்கட்சியில் ஐக்கியமாக தயாராகும் தி.மு.க., நிர்வாகிகள்


ADDED : நவ 23, 2026 04:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2026 04:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

தி.மு.க., தலைமையின் சீரமைப்பு நடவடிக்கை மீது அதிருப்தி அடைந்துள்ள சென்னை நிர்வாகிகள், த.வெ.க.,வில் இணைய தீர்மானித்துள்ளனர்.

சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பின், தி.மு.க.,வை சீரமைக்க அமைத்த ஆய்வுக்குழு, 'மாவட்ட செயலர்கள், 70 வயதுக்கு கீழ் உள்ளவர்களாக இருக்க வேண்டும். உள்கட்சி தேர்தல் நடத்தி, கிளை செயலர் முதல் மாவட்ட செயலர் வரை, தேர்வு செய்ய வேண்டும்' என, அறிக்கை அளித்தது.

இந்நிலையில், சென்னை தெற்கு மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, புதிய மாவட்ட செயலராக, 69 வயதான முன்னாள் எம்.எல்.ஏ., காரப்பாக்கம் கணபதியை நியமிக்க, தி.மு.க., மேலிடம் முடிவெடுத்துள்ளது.

மதுரவாயல் தொகுதியிலிருந்து, வில்லிவாக்கம் தெற்கு பகுதி ஒன்றிய நிர்வாகி துரை வீரமணி, மாவட்ட செயலருக்கான தேர்தலில் நிற்க விரும்பினார். ஆனால், கட்சி தலைமை, கணபதியை மாவட்ட செயலராக்க முடிவெடுத்ததால், அதிருப்தி அடைந்த துரை வீரமணி, சமீபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

கூட்டத்தில், துரை வீரமணி தலைமையில் தி.மு.க., நிர்வாகிகள் 30 பேர் உட்பட ஆயிரம் பேர், த.வெ.க.,வில் இணைய, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, துரைவீரமணியை கட்சியில் இருந்து நீக்கி, தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது.

நகராட்சி தலைவர்


திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகராட்சி தலைவர் சூர்ய பிரகாஷ், தி.மு.க.,வில் இருந்து விலகி, த.வெ.க.,வில் இணைந்தார். ஏற்கனவே கட்சி தலைமை முடிவை மீறியதால், தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட அவர், பின்னர் மீண்டும் கட்சியில் இணைந்திருந்தார்.

தி.மு.க., முன்னாள் அமைச்சர் சாமிநாதனின் ஆதரவாளரான சூர்ய பிரகாஷ், அக்கட்சியின் காங்கேயம் நகர இளைஞரணி அமைப்பாளராகவும் இருந்தார். இந்நிலையில், த.வெ.க., பொதுச்செயலரும், அமைச்சருமான ஆனந்தை, நேற்று முன்தினம், சென்னையில் சந்தித்து, த.வெ.க.,வில் இணைந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us