ADDED : ஜன 21, 2024 05:58 AM

'அமலாக்கத்துறை, தமிழக அரசியல்வாதிகள் மீது தன் நடவடிக்கைகளை ஏன் துரிதப்படுத்தவில்லை' என, கேள்விகள் எழுந்துள்ளன. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'தி.மு.க., பைல்ஸ் 3' ஆடியோவை வெளியிட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறை நடவடிக்கைகள் மீண்டும் வேகம் எடுக்கும் என, கூறப்படுகிறது. தி.மு.க., குறித்து வெளியான, இந்த ஆடியோவிற்கு பின்னால், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளார் என, தி.மு.க., - எம்.பி.,க்கள் குமுறுகின்றனர்.
தி.மு.க.,விற்கு எதிரான பல ஆவணங்கள், ஆடியோக்கள் என, பலவற்றை அமித் ஷா தான் அண்ணாமலைக்கு கொடுத்து வருகிறார். அண்ணாமலை அடுத்து வெளியிட உள்ள பைல்களில் என்ன இருக்குமோ என்ற நடுக்கத்தில் தி.மு.க.,வினர் உள்ளனராம். 'லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, தி.மு.க.,விற்கு எதிராக இப்படி செய்திகள் வெளியாகி அந்த கட்சியின் 'இமேஜை' கெடுக்க வேண்டும்' என, அமித் ஷா திட்டமிட்டுள்ளாராம்.

