sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

சென்னை துறைமுகம் வந்தது நெதர்லாந்து 'பாய்மர கப்பல்'

/

சென்னை துறைமுகம் வந்தது நெதர்லாந்து 'பாய்மர கப்பல்'

சென்னை துறைமுகம் வந்தது நெதர்லாந்து 'பாய்மர கப்பல்'

சென்னை துறைமுகம் வந்தது நெதர்லாந்து 'பாய்மர கப்பல்'

1


ADDED : நவ 26, 2024 03:36 AM

Google News

ADDED : நவ 26, 2024 03:36 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நெதர்லாந்து நாட்டின், 'ஸ்டாட் ஆம்ஸ்டர்டாம்' என்ற நவீன பாய்மர கப்பல், சென்னை துறைமுகம் வந்துள்ளது.

துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து மேம்பாடுக்காக, மத்திய அரசு, பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, வெளிநாட்டு சுற்றுலா கப்பல்கள், சென்னை துறைமுகம் வந்து செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நெதர்லாந்து நாட்டின், ராண்ட்ஸ்டாட் நிறுவனத்திற்குச் சொந்தமான, 'ஸ்டாட் ஆம்ஸ்டர்டாம்' என்ற பாய்மர கப்பல், 27 பணியாளர்கள் மற்றும் எட்டு சுற்றுலா பயணியருடன், கடந்த 21ம் தேதி சென்னை துறைமுகம் வந்தடைந்தது.

பாய் மர கப்பலுக்கு வரவேற்பு அளித்த, சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் கூறுகையில், ''நவீன பாய் மர கப்பலான, 'ஸ்டர்ட் ஆம்ஸ்டர்டாம்' கப்பல், சென்னை துறைமுகத்துக்கு வந்திருப்பது பெருமைக்குரியது.

இந்த நிகழ்வு, சென்னை துறைமுகம் உலக அளவில் கூட்டாண்மைகளை மேம்படுத்துதல், சுற்றுலாவை மேம்படுத்துதல் மற்றும் சர்வதேச துறைமுக சேவைகளை வழங்குவதை உறுதிப்படுத்துகிறது. இந்த நிகழ்வு இந்தியாவிற்கும், நெதர்லாந்துக்கும் இடையிலான ஆழமான உறவுகளை எடுத்துக்காட்டுகிறது,'' என்றார்.

நெதர்லாந்து நாட்டில் இருந்து, கடந்த ஆண்டு ஆகஸ்டில் புறப்பட்ட இந்த கப்பல், 2025 ஆகஸ்ட் வரை, உலகம் முழுக்க உள்ள முக்கிய நாடுகளில், கடல் வழி பயணம் மேற்கொள்ளும் வகையில் பயண திட்டம் வடிவைமைக்கப்பட்டு உள்ளது. இந்த பயணத்தின்போது, தங்கள் நாட்டின் தொழில், பொருளாதார வளங்கள் மற்றும் கலாசார பண்பாட்டை எடுத்துரைத்து வருகிறது.

இது, பாரம்பரிய கடல்சார் வடிவமைப்புடன் கூடிய, நவீன பாய்மரக் கப்பல், 2,200 சதுர மீட்டர் பரப்பளவில், பயிற்சிக்காகவும், விருந்தினர்களுக்கான வாடகை கப்பலாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த கப்பல் வரும் டிச., 1 வரை சென்னை துறைமுகத்தில் இருக்கும். செயற்கை நுண்ணறிவு, வாழ்க்கை அறிவியல் மற்றும் உடல்நலம், பன்முகத்தன்மை போன்ற கருப்பொருள்களை மையமாக வைத்து நிகழ்வுகள் நடக்க உள்ளன. வரும் டிச., 1ல், மும்பை துறைமுகம்சென்றடையும்.






      Dinamalar
      Follow us