ADDED : அக் 27, 2025 12:46 AM

சென்னை: தமிழக காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை , காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் கிரிஷ் ஷோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலர் சூரஜ் ஹெக்டே ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்த பின் கிரிஷ் ஷோடங்கர் அளித்த பேட்டி:
ஓட்டு திருட்டுக்கு எதிராக, வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து, கையெழுத்து இயக்கம் நடத்தி, அதை ஜனாதிபதிக்கு அனுப்ப காங்., திட்டமிட்டது.
அத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் இதுவரை, 76.06 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டுஉள்ளன. ஒரு கோடி இலக்கை அடைவோம் என, எதிர்பார்க்கிறோம்.
பொது மக்களும், இளைஞர்களும் தானாக முன்வந்து கையெழுத்திட்டு ஆதங்கத்தை பதிவு செய்தனர்.
சட்டசபை தேர்தலில், 125 தொகுதிகளை அடையாளம் கண்டு, தேர்தல் பணியை தீவிரமாக மேற்கொள்ள உள்ளோம். ஆட்சியில் அதிகாரம், கூட்டணி தொடர்பான முடிவுகளை, டில்லி மேலிடம் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
செல்வப்பெருந்தகை கூறுகையில், ''தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கிறது. கூட்டணி தொடர்பாக, அகில இந்திய தலைமை தீர்மானிக்கும்,'' என்றார்.

